வித்தியாசமான சிரிப்பு கதை...!!
கிராமத்தில் படித்த சேகர் என்பவன் ஒரு நாள் வெளியூர் சென்றிருந்தான். அங்கு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினான். அவனது அறையில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது. அவன் தன் மனைவிக்கு ஒரு நு-அயடை அனுப்புவதற்காக கம்ப்யூட்டரை இயக்கி, மெயில் டைப்பிங் செய்தான். அதை அனுப்பும் அவசரத்தில் 'Send" என்கிற இடத்தில் அவனது மனைவியின் Mail Id-ஐ போடாமல், தவறாக வேறு ஏதோ ஐடியை எழுதிவிட்டான்.
இதை கவனிக்காமல் மெயிலை யாருக்கோ அனுப்பிவிட்டான். அவன் அனுப்பிய மெயில் ஒரு விதவை பெண்ணுக்கு வந்து சேர்ந்தது. அந்த விதவை பெண் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை நினைத்து அழுதுகொண்டிருந்தாள். பிறகு அவள் மனதைத் தேற்றிக்கொண்டு தனது டுயிவழி-ஐ திறந்து ஏதேனும் மெயில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள். அப்போது சேகர் தவறுதலாக இவளுக்கு அனுப்பியிருந்த ஆயடை-ஐ படித்ததும், அவள் தலைசுற்றி மயங்கி தரையில் விழுந்தாள்...
(அதில் பின்வருமாறு எழுதி இருந்தது)
'அன்பான மனைவிக்கு, உன் கணவன் எழுதுவது... இந்த கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இங்கே கம்யூட்டர், இன்டர்நெட் வசதியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு Mail அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே நல்ல சாப்பாடு, டபுள் பெட்ரூம் என எல்லா வசதியும் உள்ளது. நீயும் சீக்கிரமாக இங்கே வரவேண்டும் என ஆசைப்படுகிறேன். உனது வரவை எதிர்பார்த்து, வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்."
இப்படிக்கு,
உன் அன்புக்குரிய கணவன்.
---------------------------------------------------------
விடுகதைகள்...!!
---------------------------------------------------------
1. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன?
2. கன்று நிற்க கயிறு மேயுது. அது என்ன?
3. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
4. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன?
5. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல். அது என்ன?
விடை :
1. பணம்
2. பூசணிக்கொடி
3. தொலைபேசி
4. பாய்
5. சிலந்தி வலை
---------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
---------------------------------------------------------
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
பொருள் :
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக