
மாஸ்டர் கார்டு நிறுவன புதிய (டெபிட், கிரெடிட்) கார்டுகள் சேவைகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களை அதன் நெட்வொர்க்கில் சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்.,
மாஸ்டர் கார்டு (MasterCard) நிறுவனம் இந்தியாவில் கட்டண முறை தரவுகளை சேமிப்பதில் அதன் விதிமுறைகளை மீறியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) போதுமான வாய்ப்புகளும், கால அவகாசமும் கொடுக்கப்பட்டும் மாஸ்டர் கார்டு நிறுவனம் வாடிக்கையாளர்கள் மீதான கட்டண தரவுகளை சேமிக்க தவறியது. விதிமுறையை சரியாக பின்பற்றவில்லை என்பதால் தடை அவசியமாகிறது.
ரிசர்வ் வங்கியின் கட்டளைக்கு மாஸ்டர் கார்டு இணங்க தவறியதால் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுடுள்ளது. மறுபுறம் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் மாஸ்டர் கார்டின் தற்போதைய வாடிக்கையாளர்களை எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
வங்கியின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கல்களை எதிர்கொண்டது, இணைய வங்கி மற்றும் கட்டண முறைகளில் பல குறைபாடுகள் இருந்தது. எனவே டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி HDFC வங்கியில் அனைத்து டிஜிட்டல் அறிமுகங்களையும் தற்காலிகமாக தடை செய்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புகளை உள்ளடங்கிய சர்வர், இந்தியாவில் இருக்க வேண்டும் என தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக