
கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு சேவையும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. விரைவில் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது இந்நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்தஇலவச சேவையில் திடீர் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
கூகுள் மீட் சேவை
கூகுளின் வீடியோ கான்பரன்சிங் சேவையான கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்கள் கடந்து பயன்படுத்த முடியாது.
குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால் இந்த கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவைஇலவசமாக வழங்கப்பட்டது. அதுவும் வீட்டில் இருந்து வேலை செய்யும் பல்வேறு மக்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்றே கூறலாம். கூகுள் சேவையை போலவே ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் கூகுள் தனது இலவச சேவையை நிறுத்தி இருந்தாலும், ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 முதல் இலவச வரம்பற்ற க்ரூப் காலிங் வசதியை நீக்க கூகுள் திட்டமிட்டது. ஆனால் ஜூன் 30, 2021 வரை நீட்டித்து தற்போது இதனை நிறுத்தியது.
கூகுள் நிறுவனம் விரைவில் தனது புதிய கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அதிநவீன அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் இந்த சாதனங்கள் வெளிவரும். மேலும் இந்த சாதனங்களின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
கூகுள் பிக்சல் 6
பிக்சல் 6 ஸ்மார்ட்போன் மாடல் செல்பீ ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் 6.4 இன்ச் எஃப்.எச்.டி டிஸ்பிளே அமோலேட் டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 870 SoC-ஐப் போலவே சக்திவாய்ந்ததாக கூறப்படும் தனித்துமான கூகுள் சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 12, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி, 4614 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டு கேமராக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என இரண்டு கேமராக்கள் இடம்பெறும் என்றும், செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 6 ப்ரோ
கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.71-இன்ச் கியூஎச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி/256 ஜிபி /512 ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. அதாவது 50எம்பி வைடு லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 12எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த புதிய ஸமார்ட்போன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக