Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

இனி பக்கத்து வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை: வைஃபை-ல் வந்த மிகப்பெரிய மாற்றம்: அதிவேக இணையத்தில் வைஃபை 6இ!

 பெண்கள் - வைஃபை பாதுகாப்பு - ISEA
புதிய வைஃபை ஆனது வைஃபை 6இ எனப்படும் தரநிலை மூலம் அறிவிக்கப்பட்டது. புதிய வைஃபை தரநிலை ஆனது 2022-க்கு அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆப்பிள், ரூட்டர் ஓஇஎம்-கள் உள்ளிட்ட பிற பிராண்ட்களும் ஏற்றக் கொண்டுள்ளனர். நீங்கள் தொழில்நுட்பம் பயன்படுத்தும் போது நீங்கள் அதிவேக வைஃபை வேகத்தை அனுபவிக்க முடியும். வைஃபை-களில் சந்திக்கப்படும் அதிக நெரிசலை கருத்தில் கொண்டே இந்த புதிய தர தொழில்நுட்பம் வருகிறது.

புதிய வைஃபை 6இ

புதிய வைஃபை 6இ தரநிலை சாதனங்கள் ஆனது வைஃபை 6 நெறிமுறையை ஆதரிக்கிறது. வைஃபை 6 மற்றும் முந்தைய தலைமுறை வைஃபை 2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ பேண்ட்களை பயன்படுத்துகின்றன. வைஃபை 6இ சாதனமானது 6 ஜிகாஹெர்ட் பேண்டில் இயங்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இது அதிக தரவு வேகத்தை வழங்குகிறது. இதன்மூலம் தற்போது மூன்றாவது பேண்ட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக தரவு வேகம்

வைஃபை 6இ மூலம் அதிக தரவு வேகத்தை அனுபவிக்க முடியும். வைஃபை 6இ 14 கூடுதல் 80 மெகாஹெர்ட்ஸ் சேனல்களையும், 7 கூடுதல் 160 மெகா ஹெர்ட்ஸ் சேனல்களையும் அனுமதிக்கிறது. இதன்மூலம் அதிக பேர் நெட்வொர்க்குகளை பயன்படுத்தும் போது ஏற்படும் நெரிசல்களை குறைக்க உதவும். வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் மெய்நிகர் போன்ற வேகமான உயர் அலைவரிசை தேவை இருப்பவர்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும். வைஃபை 6இ பயன்பாட்டின் மூலம் ஒரே நெட்வொர்க்கில் அதிக பயனர்களை இணைக்கலாம். நெட்வொர்க் பயனர்களை ஒன்றோடு ஒன்று இணைக்காமல் அதிக பாதுகாப்பையும் இது உறுதி செய்கிறது.

பல வைஃபை இணைப்புகள்

இத்தனை நாட்களாக தங்களை சுற்றி பல வைஃபை இணைப்பு கிடைத்தாலும் அதை முழுமையாக பயன்படுத்த முடியாமல் இருந்திருக்கும். 2.4GHz அல்லது 5Hz இல் இருக்கும் குறிக்கீடு இதற்கு காரணம், இந்த சிக்கலை வைஃபை 6இ தீர்க்கிறது.

அதிகபட்ச வேகத்தை அனுபவிக்கலாம்

காரணம் இது வைஃபை 5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 6 ஜிகாஹெட்ஸ் ஆகிய இணைப்பே ஆகும். அதிகபட்ச வேகத்தை இதில் அனுபவிக்க முடியும். புதிய வைஃபை 6இ தொழில்நுட்பம் நிலையான அம்சமாக இருக்கும். இது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் 2022-ல் நிலையான பதிப்பாக கிடைக்கும். தற்போது நீங்கள் வயர்லெஸ் ரவுட்டர்களை பார்த்தால் அதில் வைஃபை 6 மற்றும் வைஃபை 6இ இரண்டையும் பார்க்க முடியலாம்.

நெரிசல் இன்றி பயன்படுத்தலாம்

வைஃபை 6இ என்பது வைஃபை 6 போன்றது. ஆனால் அதிக ஸ்பெக்ட்ரம்களை கொண்டிருக்கிறது. வைஃபை 6 2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ் ஆகியவையே கொண்டுள்ளது. இதன்மூலம் இணையத்தை பயன்படுத்தி இருந்தாலும் வைஃபை 6இ மூலம் அதிவேக இணையத்தை நெரிசல் இன்றி பயன்படுத்தலாம். வைஃபை 6இ இணைப்பு தங்களின் பக்கத்து வீட்டில் இருந்தால் அதை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே அதே வேகத்தில் பயன்படுத்த முடியும்.

நான்கு மடங்கு அதிக வேகம்

5 ஜிகாஹெட்ஸ்-ல் இருந்து 6 ஜிகாஹெர்ட்ஸ் என்பது அதிக மாற்றம் இல்லை என்றாலும் ரூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களில் கிடைக்கும் அலைவரிசைகளை விட நான்கு மடங்கு அதிக வேகத்தை அனுபவிக்க முடியும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக