ஆப்கானிஸ்தானில்
தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் நடைபெற்ற போர்
முடிவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை
கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து உலக நாடுகள்
தங்கள் நாட்டு தூதரங்களை காலி செய்யும் பணிகளையும், தங்கள் நாட்டவர்களை
மீண்டும் அழைக்கும் பணியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரம் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெறும் அச்சுறுத்தலும் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதம்
ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றிய விவகாரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு செயலர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்திய தூதராக இருந்த ருதேந்திர டாண்டன் தில்லி திரும்பினார். இவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மக்களுக்கு தேவையான உதவிகள்
இந்த கூட்டத்தில் இந்தியாவுக்கு வர தயாராக இருக்கும் அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கும் ஆப்கன் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டுவிட்டர் விளக்கம்
ஆப்கானிஸ்தான் நிலை தொடர்ச்சியாக மாறிவரும் நிலையில் அந்த பகுதி மக்கள் டுவிட்டர் மூலம் உதவிகள் மற்றும் நிவாரணத்திற்கு அணுகுவதை காண முடிகிறது. எனவே அந்நாட்டு பொது மக்கள் நலன் கருதியும் அவர்களின் பாதுகாப்பை கருதியும் டுவிட்டர் சேவையை தொடர முடிவெடுத்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் பதிவுகள் தொடர்ந்து கண்காணிப்பு
இருப்பினும் அந்நாட்டு அனைத்து டுவிட்டர் பதிவுகளையும் தொடர்ந்து கண்காணத்து வன்முறையை ஊக்குவிக்கும் பதிவுகளை நீக்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. விதிகளை மீறக்கூடிய உள்ளடக்கத்தை மறுபரிசீலனை செய்து குறிப்பாக வன்முறையை தூண்டு ம்ற்றும் ஸ்பேம் ஆகியவற்றை நீக்கி வருவதாக தெரிவித்துள்ளது.
ஆப்கான் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை
அதேபோல் பேஸ்புக் நிறுவனம் ஆப்கான் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கிளர்ச்சி குழுவுடன் தொடர்புடைய உள்ளடக்கம் குறித்து கண்காணிக்கவும் அவைகளை அகற்றுவதற்கும் ஆப்கானிஸ்தான் நிபுணர்களின் பிரத்யேக குழு இருப்பதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. சமூகவலைதளமான பேஸ்புக், தலிபான்கள் மற்றும் அதன் தளங்களில் இருந்து ஆதரவளிக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கணக்குகள் அகற்றம்
பல ஆண்டுகளாக தலிபான்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்தி அதன் செய்திகளை பரப்பி வருகின்றன. தலிபான்கள் அமெரிக்க சட்டத்தின்படி ஒரு பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேஸ்புக் நிறுவனம் அச்சுறுத்தல் கொள்கைகளின் கீழ் இந்த சேவையை தடை செய்துள்ளது. அதாவது தலிபான்கள் மற்றும் அதன் தொடர்புடன் பராமரிக்கப்படும் கணக்குகளை தாங்கள் அகற்றி விட்டதாக பேஸ்புக் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக