
கொரோனா
வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. மேலும்
தமிழ்நாட்டில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது
மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் சென்னையில்
கொரோனா பாதிப்பு
மீண்டும் முதலிடத்தில் அமர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. அதாவது மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதேபோல் உலக நாடுகளில் அமெரிக்காதான் இந்த கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த நாட்டில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதில் 6 லட்சத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மக்கள் தடுப்பூசி செலுத்தவதை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல சலுகைகளை அறிவித்து வருகிறது.
அதன்படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகர மேயர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பதின்ம வயதினருக்கு ஆப்பிள் AirPods வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாஷிங்டன் நகர மேயர் முரியல் பவுசர் அவர்கள் ட்விட்டர் வழியே தெரிவித்த தகவல் என்னவென்றால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பதின்ம வயதினருக்கு இலவச ஆப்பிள் AirPods வழங்கப்படும் என்றும், பின்பு ப்ரூக்லேண்ட் எம்எஸ், சூசா எம்எஸ், ஜான்சன் எம்எஸ் ஆகிய 3 சென்டர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளும் பதின்ம வயதினருக்கு இந்த சலுகை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல்
12 முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இலவச AirPods பெற
விரும்பும் மாணவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள தயாராகி, தங்களது
பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து கொண்டு குறிப்பிட்ட தடுப்பூசி
மையங்களில்
ஏதாவது ஒன்றிற்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மட்டுமே இப்போது தற்காலிக தீர்வாக இருக்கிறது. இது நோயின் தீவிரத்தை குறைக்கிறது. அதேபோல் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் இன்னும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக