Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ரோபோ நாய்., நாலு கால் பாய்ச்சலில் நச்சுனு ஒரு ரோபோ- "சைபர் டாக்" அறிமுகம் செய்த சியோமி: விலை என்ன தெரியுமா?

மூன்று மணிநேர வெளியீட்டு நிகழ்வு

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் மிகவும் பிரபலமானவையாகும். சியோமி நிறுவனம் தற்போது தனது அடுத்த இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. சீன எலெக்ட்ரானிகஸ் தயாரிப்பாளரான சியோமி சைபர் டாக் என்றழைக்கப்படும் தனது முதல் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நிறுவனம் பல கட்டம் முன்னோக்கியுள்ளது. இதுஒரு சோதனையாகும் இந்த இயந்திரம் முன்னறிவிக்கப்படாத பல சாத்தியங்களை வைத்திருக்கிறது என கூறப்படுகிறது.

மூன்று மணிநேர வெளியீட்டு நிகழ்வு

சியோமி நிறுவனம் நடத்திய மூன்று மணிநேர வெளியீட்டு நிகழ்வில் இந்த ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. சியோமி சைபர் டாக்கின் துவக்கம் அதன் பொறியியல் திறமையின் உச்சம் என கூறப்படுகிறது. டெவலப்பர்கள் உருவாக்கக்கூடிய ஒரு திறந்த மூல ரோபாவாக இருக்கிறது.

சைபர் டாக் ரோபோ அறிமுகம்

சைபர் டாக் மூலம் ஆராயக்கூடிய வரம்பற்ற பல சாத்தியங்களை சியோமி குறிப்பிட்டாலும் அதன் விளக்கத்தை குறிப்பிடவில்லை. ரோபோவின் முதல் 1000 யூனிட்களை மட்டுமே தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது ஒவ்வொன்றின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.1,14,000 ஆக இருக்கிறது. சியோமி இந்த தயாரிப்பை இந்தியாவிற்கு கொண்டுவர சாத்தியமில்லை என்றாலும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதன் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சக்திவாய்ந்த துல்லியமான மற்றும் சுறுசுறுப்பான ரோபோ

சியோமியின் வலைப்பதிவு மூலம் சைபர் டாக் ஆனது சக்திவாய்ந்த துல்லியமான மற்றும் சுறுசுறுப்பான ரோபோ என அழைக்கப்படுகிறது. சியோமியின் உள் தயாரிப்பு சர்வோ மோட்டர்களை பேக் செய்துள்ளது. இது அதிக வேகம், சுறுசுறுப்பு மற்றும் பரந்த அளவிலான இயக்கமாக இருக்கும்.

சி போர்ட்கள் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்கள்

இது என்விடியா ஜெட்சன் சேவியர் என்எக்ஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது. சைபர் டாக் வெளிப்புற இடைமுகத்தில் சி போர்ட்கள் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்கள் உள்ளன. இது டெவலப்பர்களை வன்பொருளுடன் மென்பொருளை இணைக்க பயன்படுகிறது. இதில் தேடல் ஒளி, பனோரமிக் கேமரா, மோஷன் கேமரா, லிடார் ஆகிய ஆதரவுகள் உள்ளன. சைபர் டாக் 11 உயர் துல்லிய சென்சார்களை கொண்டுள்ளது. இதில் டச் சென்சார்கள், கேமராக்கள், அல்ட்ராசோனிக் சென்சார்கள், ஐபிஎஸ் தொகுதிகள் ஆகியவை அடங்கும்.

கட்டளையிடவும் கட்டுப்படுத்தவும் ரோபோ

சைபர் டாக் கட்டளையிடவும் கட்டுப்படுத்தவும் பயனர்கள் குரல் உதவியாளர்களை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. மேலும் இதை கட்டளையிடவும் கட்டுப்படுத்தவும் ரிமோட் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பயன்படுத்தலாம். சைபர் டாக் மிகவும் தனித்துவமான பணிகளுக்கு அழைக்கப்படலாம்.

சென்சார் அமைப்புடன் வரும் ரோபோ

ரோபோ பார்வைக்கான சென்சார் அமைப்புடன் வருகிறது. சைபர் டாக் அதன் சுற்றுப்புறங்களை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கிறது. இது இலக்கை திட்டமிடவும் தடைகளை தவிர்க்கவும் அனுமதிக்கிறது. மனித தோற்றம் மற்றும் முகத்தை அடையாளம் காண அனுமதிக்கிறது.

ரோபோ டாக் ஸ்பாட் என்ற இரண்டு வீடியோ

ரோபோ டாக் ஸ்பாட் என்ற இரண்டு வீடியோ

சமீபத்தில் போஸ்டன் டைனமிக்ஸ் அதன் ரோபோ டாக் ஸ்பாட் என்ற இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. ஒரு வீடியோ ஏழு ரோபோட் நாய்கள் குழுவாக ஒரே மாதிரி நடனமாடுகிறது. அதேபோல் ஸ்பாட் கூட்டம் தென்கொரிய கே-பாப் இசைக்குழுவுடன் நடனமாடுகின்றன. போஸ்டன் டைனமிக்ஸ் வெளியிட்டுள்ள ரோபோ நாய் நடனங்கள் நம்ப முடியாத வகையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக