
அமைவிடம் :
சிவபுரி உச்சிநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும். இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி 'திருநெல்வாயில்" என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோயில் அமைந்துள்ளது.
மாவட்டம் :
அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி, அண்ணாமலை நகர் வழி, கடலூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
சிதம்பரத்திலிருந்து இவ்வாலயத்திற்குச் செல்ல குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து வசதியும், எல்லா நேரங்களிலும் ஆட்டோ வசதியும் உள்ளன. மேலும் காரிலும் இக்கோவிலிற்கு செல்லலாம்.
கோயில் சிறப்பு :
சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று.
சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் - பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர்.
சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார்.
சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலமும் இதுவாகும்.
குருவாயூர் போன்று இங்கும் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுகிறர்கள்.
இக்கோயிலில் கொடி மரம் இல்லை. மேலும் முன் மண்டபத்தில் நந்தியைச் சுற்றியுள்ள முன், பின் இரு தூண்களில் நால்வர் சிற்பங்கள் உள்ளன.
பெரும்பாலான ஆலயங்களில் பிரகார சுற்றில் பரிவார தெய்வங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இவ்வாலயத்தில் பிரகாரச் சுற்றுக்கும், கருவறைக்கும் இடைபட்ட இடத்தில் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது அனைத்து மூர்த்தங்களையும் ஒருசேர சுற்றும் விதமாக பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் திருவிழா :
வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம் போன்ற விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
இக்கோயிலில் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால் காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப் பிரச்சனைகள் வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
நேர்த்திக்கடன் :
சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரமும் சாற்றுகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக