கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-----------------------------------------------------
பையன் : அப்பா படிப்புக்கு முதல் எதிரி 'டிவி" தான்னு நீங்க அடிக்கடி சொல்வீங்க இல்லையா?
அப்பா : அதுக்கென்ன இப்போ?
பையன் : அந்த எதிரியை கிரிக்கெட் பாலால ஓங்கி ஒரு தட்டுத் தட்டினேன்... 'டிவி" உடைஞ்சு போச்சு!
அப்பா : 😱😱
-----------------------------------------------------
பாலு : நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே..
கிருஷ்ணன் : ஐயையோ! அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது.. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன்.
பாலு : 😂😂
-----------------------------------------------------
இந்த டவுட் உங்களுக்கும் இருக்கா?
-----------------------------------------------------
🤔 யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் போகிறதே... அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
🤔 டெலிபோன்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு... கால்குலேட்டர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு?
🤔 மூக்குலயும், வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா?
சிந்தனை வரிகள்...!!
-----------------------------------------------------
🌟 உலகத்துல எல்லாமே சொல்லித் தெரிஞ்சுக்கிற விஷயம்தான். தெரிஞ்சுக்கிற ஆர்வம் பொறுத்து தெளிவு வரும். ஆர்வம் வரணும்னா, எண்ணத்துல தர்மம் வேணும்.
🌟 வாழ்க்கையில் உயர ஒரு மனிதன் உயரவான எண்ணங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டாலே போதும்.
🌟 மகிழ்வான நேரங்கள் நல்ல ஞாபகங்கள் ஆகின்றன. கடினமான நேரங்கள் நல்ல பாடங்கள் ஆகின்றன.
🌟 செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை. உங்களுக்குள் இருக்கும் திறமையை நீங்களே வளர்த்து கொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான்.
-----------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்?
பொருள் :
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
-----------------------------------------------------
அட அப்படியா?
-----------------------------------------------------
🌄 வட துருவத்தில் குளிர்காலத்தில் சூரியன் தோன்றுவதில்லை. 186 நாட்களுக்கு தொடர்ந்து இருட்டாகவே இருக்கும்.
🌹 ஒரு கிலோ குங்குமப் பூவைச் சேகரிக்க வேண்டுமானால் 1 லட்சத்து 40 ஆயிரம் பூக்களிலிருந்து அதை சேகரிக்க வேண்டும். அதனால் தான் குங்குமப் பூ அதிக விலையில் விற்கப்படுகிறது.
🌋 சாலார் ஏரியில் உள்ள உப்பைக் கொண்டு உலகின் உப்புத் தேவையை 2 ஆயிரம் ஆண்டுகள் ஈடுகட்டலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக