
ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் என்பது தொடர்ந்து எட்டு முறையாக மாற்றம் செய்யப்படாமல் இருந்து வருகின்றது. இது தொடர்ந்து 4% ஆக இருந்து வருகின்றது.
இதனால் வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதம் என்பது மாற்றம் செய்யப்படாமலேயே இருந்து வருகின்றது.
குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவு, குறைந்த விகிதத்தில் இருந்து வருகின்றது.
வட்டி விகிதம் எப்படி தீர்மானிக்கப்படும்
எனினும் உங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் என்பது பாலினம், கடன் தொகை, கிரெடிட் ஸ்கோர், கடன் அளவு உள்ளிட்டவற்றை பொறுத்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீங்கள் 75 லட்சத்திற்கு மேல் கடன் வாங்க நினைக்கிறீர்கள் எனில், வருடத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
தற்போதைய வட்டி விகிதம்
கீழ்கண்ட 75 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு வருடத்திற்கு எத்தனை சதவீதம் வட்டி வீதம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களது கிரெடிட் ஸ்கோரினை பொறுத்து மாறுபடும்.
பஞ்சாப் & சிந்த் வங்கி - 6.65 - 7.35%
பேங்க் ஆப் பரோடா - 6.75 - 8.35%
பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.8 - 7.85%
சென்ட்ரல் வங்கி - 6.85 - 7.30%
பேங்க் ஆப் இந்தியா - 6.85 - 8.35%
யூகோ வங்கி - 6.90 - 7.25%
பேங்க் ஆப் மகாராஷ்டிரா - 6.9 - 8.40%
கனரா வங்கி - 6.9 - 8.9%
யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 6.9 - 7.4%
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 6.95 - 7.40%
இந்தியன் வங்கி - 7.1 - 7.4%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 7.15 - 7.3%
குறைவான வட்டி விகிதம்
இதற்கிடையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா ஒரு ஸ்பெஷல் ஆஃபரை அறிவித்துள்ளது. இது வீடு வாங்க நினைப்போருக்கு மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ள நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கி சில சலுகைகளையும் அறிவித்துள்ளது.
செயல்பாட்டுக் கட்டணம் தள்ளுபடி
தற்போது நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு ஜீரோ செயல்பாட்டு கட்டணத்தினை அறிவித்துள்ளது. இது வீடு வாங்க நினைப்போருக்கும், வீடு கட்ட நினைப்போருக்கும் மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது வாடகை வீட்டில் வசிப்போருக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
கூடுதல் சலுகை
எஸ்பிஐ தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை 6.70% முதல் வழங்கி வருகின்றது. எஸ்பிஐயின் இந்த வட்டி விகிதமானது 30 லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு பொருந்தும்.
ஏற்கனவே வட்டி விகிதம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணம் என அனைத்தும் குறைவாக உள்ள இந்த நேரத்தில், யோனோ ஆப் மூலமாக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக, 5 அடிப்படை புள்ளிகள் சலுகையாக கிடைக்கும்.
இதோடு பெண் வாடிக்கையாளர்கள் எனில் இன்னும் சிறப்பு எனலாம். ஏனெனில் பெண் வாடிக்கையாளார்களுக்கும் 5 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தில் சலுகை உண்டு.
எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ்
மேற்கண்ட வங்கிகளோடு ஒப்பிடும்போது இன்றைய காலத்தில் எஸ்பிஐ-விட மலிவான வீட்டுக் கடனை வழங்கும் ஒரே நிறுவனம் எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் தான். அரசுக்கு சொந்த நிறுவனமான இது 6.66% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக