Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 18 ஆகஸ்ட், 2021

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்போறீங்களா.. முதலில் இதை படிங்க.. !

 மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்போறீங்களா.. முதலில் இதை படிங்க.. !

சந்தை சரிவில் இருக்கும் போது நல்ல ஃபண்டுகளின் என் ஏவி குறைந்திருந்தாலும் வாங்கி வைக்கலாம். ஏனெனில் அதன் மூலம் கூடுதல் யூனிட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

பணத்தினை ஒரே ஃபண்டில் முதலீடு செய்யாமல், பலவிதமான ஃபண்டுகளில் பிரிச்சு முதலீடு செய்யலாம். இதனால் ரிஸ்கும் குறையும். ஏனெனில் ஒரு ஃபண்டில் லாபம் கிடைக்காவிட்டாலும், மற்ற ஃபண்டுகள் லாபம் கொடுக்கலாம். இதனால் ரிஸ்கும் குறையும். கணிசமான வருவாயும் கிடைக்கும்.

எதற்காகவும் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். அது மியூச்சுவல் ஃபண்டு மட்டும் அல்ல, வேறு எந்த வகையான முதலீடுகளையும் கடனை வாங்கி முதலீடு செய்யாதீர்கள்.

எல்லாவற்றையும் விட எந்த ஃபண்டில் எல்லாம் முதலீடு செய்யாலாம் என பலரிடம் ஆலோசனையை மேற்கொள்ளுங்கள். ஆனால் இறுதி முடிவு என்பது உங்களுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். யாரையும் சார்ந்து அவர் சொன்னார், இவர் சொன்னார் என முதலீடு செய்யக்கூடாது.

இன்றைய காலகட்டத்தில் இதனை பற்றி தெரிந்து கொள்ள நிறைய வழிகள் உள்ளன. ஆன்லைனிலேயே நிறைய படிக்கலாம். பல நிறுவனங்கள் இலவச வகுப்புகளையும் நடத்துகின்றன. நிறைய புத்தகங்களில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் எக்காரணத்தினைக் கொண்டும், யாரோ சொன்னார்கள் என, எதுவும் தெரியாமல் முதலீட்டினை செய்யாதீர்கள்.

புதியவர்கள் முதலீடு செய்வதற்கு முன்பு முதலீட்டு ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சரிவை சந்திக்கும் திட்டங்களிலிருந்து தப்பிக்க இத்தகைய நடைமுறை அவசியம். ஏனெனில் எந்த துறையானது எப்போது சரிவினைக் காணும் என்று ஓரளவுக்கு கணித்து சொல்வார்கள்.

ஒரு ஃபண்டில் முதலீடு செய்கிறோம். அது தொடர்ந்து பல மாதங்கள் வரை, எவ்வித முன்னேற்றமும் இல்லை எனில், அதனை வேறு நல்ல ஃபண்டிற்கு மாற்றுவது நல்லது. சொல்லப்போனால் அது புத்திசாலிதனமும் கூட.

அவசர தேவைகளுக்கு வைத்திருக்கும் பணத்தினை எக்காரணம் கொண்டும், முதலீடு செய்ய கூடாது.

நீங்கள் முதலீடு செய்வது என்பது நல்ல ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் அதனை முதலீடு செய்யும் போது ஒன்று பல முறை யோசித்து, இது சரியான முதலீடு தானா? என்பதையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக