Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 18 ஆகஸ்ட், 2021

தாலிபான் தொடர்புடைய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்

 தாலிபான் தொடர்புடைய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன. 

தலிபான்கள் வசம் ஆப்கானின் (Afghanistan) பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்களே. தாலிபான்கள் மிக விரைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலையும் (Kabul) தாலிபான்கள் கைப்பற்றினர். மேலும் ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கட்டுக்குள் அதிகாரப்பூர்வமாக செல்வது உறுதியானது. சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

தாலிபான்கள் நாடு தழுவிய இராணுவ வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர் அதிபர் கானியுடன் நாட்டின் பல முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தனின் புதிய அதிபராகக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனைத் தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

எனவே ஆப்கானிஸ்தான்  தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒருவித அசாதாரண சூழல் நிலவியது. இதையடுத்து தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில் தற்போது தலிபான்கள் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக