இது சிரிக்க மட்டுமே !!
------------------------------------------------------------
விடைத்தாளில் விடை இருக்கிறதா ?
தேர்வு நேரம் மாணவர்கள் தேர்வறையில் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆசிரியர் முதலில் வினாத்தாளை கொடுத்தார். மாணவர்கள் வாங்கி கொண்டார்கள்.
பிறகு, பதில் எழுதுவதற்கு விடைத்தாளை கொடுத்தார். அப்போது தேர்வறையில் சலசலப்பு ஏற்பட்டது. 'என்ன சலசலப்பு?" என்று ஆசிரியர் கேட்டார். அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்று, 'இது என்ன சார்?" என்று கேட்டான். ஆசிரியர் சொன்னார் விடைத்தாள் என்றார்.
உடனே மாணவன் இவ்வளவு பெரிய மனிதர் பொய் சொல்லலாமா?
'நான் பொய் சொன்னேனா?" என்று ஆசிரியர் கேட்டார்.
வினாத்தாள்என்கிறீர்கள் அதில் வினா இருக்கிறது. விடைத்தாள் என்கிறீர்கள் அதில் விடைஇருக்கிறதா?
ஆசிரியர் வாயடைத்து போனார்..😱😆
------------------------------------------------------------
சில யதார்த்தங்கள்..!
------------------------------------------------------------
✨விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க,
சில இடங்களில் விலையை வாசிக்க மட்டுமே முடிகிறது.!
✨இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மைப் பத்தி நினைக்கிறதேயில்ல!..
✨இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!
------------------------------------------------------------
இது புதுசு கண்ணா புதுசு..!
------------------------------------------------------------
பழசு : வெட்டு ஒன்னு... துண்டு ரெண்டு..!!
புதுசு : செல்போன் ஒன்னு... சிம்மு ரெண்டு..
பழசு : கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது..!!
புதுசு : பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது..
பழசு : நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..!!
புதுசு : வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்..
பழசு : ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது..!!
புதுசு : டவர் கிடைக்கும் வரை டைம் காத்திருக்காது..
பழசு : ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!
புதுசு : கேமரா இல்லாமல் போனை வாங்காதே..
பழசு : கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை..!!
புதுசு : கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை.
பழசு : பேராசை பெருநஷ்டம்..!!
புதுசு : பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்..
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக