
யாகூ இந்தியாவில் செய்தி செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு எளிதாக எடுக்கவில்லை என தளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் மீடியாவுக்கு எஃப்டிஐ விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்தியாவுக்கான செயல்பாடுகளில் பாதிக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையச் சேவை வழங்குனர் யாகூ
அமெரிக்க இணையச் சேவை வழங்குனர் யாகூ ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று இந்தியாவில் தனது செய்தி செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதில் வியாழக்கிழமை (இன்று) முதல் எந்த புதிய உள்ளடக்கத்தையும் வெளியிடாது. இருப்பினும் இந்த சேவை நிறுத்தம் காரணமாக யாகூ மெயில் எதுவும் பாதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
இனி உள்ளடக்கத்தை வெளியிடாது
ஆகஸ்ட் 26, 2021 வரை, யாகூ இந்தியா இனி உள்ளடக்கத்தை வெளியிடாது. இருப்பினும் தங்களது யாகூ கணக்கு அஞ்சல் மற்றும் தேடல் அனுபவங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது எனவும் வழக்கம் போல் செயல்படும் எனவும் ஆதரவுக்கும் வாசகர்களுக்கு நன்றி எனவும் அமெரிக்க இணைய சேவை வழங்குனரான யாகூ முகப்பு பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த பணி நிறுத்தத்தால் பாதிக்கப்படும் உள்ளடக்க சலுகைகளில் யாகூ நியூஸ், யாகூ கிரிக்கெட், நிதி, பொழுதுபோக்கு மற்றும் மேக்கர்ஸ் ஆகிய சேவைகளும் அடங்கும்.
டிஜிட்டல் மீடியாவுக்கான புதிய எஃப்டிஐ விதிமுறை
இணைய வழங்குனரான யாகூ தளம் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை. இந்தியாவில் செயல்படும் டிஜிட்டல் மீடியாவுக்கான புதிய எஃப்டிஐ விதிமுறைகள் தங்கள் தயாரிப்புகளை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளது. யாகூ கிரிக்கெட்டில் விளையாட்டுகளை பற்றிய செய்தி கூறுகள் உள்ளது. இதன்காரணமாக இது புதிய விதிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் பெருமைப்படுகிறோம்: யாகூ
யாகூ இந்தியாவுடன் நீண்டகால தொடர்பை கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் எங்கள் பயனர்களுக்கு வழங்கிய பிரீமியம், உள்ளூர் உள்ளடக்கம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம். தங்களது பிராண்டில் உங்கள் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி, என குறிப்பிட்டுள்ளது. இந்த சேவை யாகூ மெயில் பயனராக இருந்தால் உங்களை எந்த வகையிலும் பாதிக்காது. இந்திய பயனர்களுக்கு தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து சேவை செய்யும் என குறிப்பிட்டுள்ளது.
யாகூ சேவை மிகவும் பிரபலமடைந்தது
யாகூ சேவை மிகவும் பிரபலமடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. யாகூ இந்தியாவுடன் நீண்ட கால உறவைக் கொண்டிருந்தோம் எனவும் இங்குள்ள பயனர்களுடைய தங்களின் இணைப்பு திறந்தே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. யாகூ வெரிசோன் மீடியாவுக்கு சொந்தமானது, இந்த நிறுவனத்தின் செய்தி சேவை பணி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.புதிய எஃப்டிஐ விதிமுறைகள்
புதிய எஃப்டிஐ விதிமுறைகள் குறித்து பார்க்கையில், இதன் நிபந்தனைகள் வெளிநாட்டு நிதியை பெற டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை மேற்கோள் காட்டுகின்றன. தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எந்த டிஜிட்டல் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவிலும் பெரும்பான்மையானவர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும் என விதிமுறைகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக