Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 4 ஆகஸ்ட், 2021

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில், தாமுநகர், புலியகுளம், கோயம்புத்தூர்.


அமைவிடம்:

கோவை புலியகுளம் தாமுநகரில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. தாங்கள் செய்யும் செயல்களில் எந்தவித விக்னங்களும் வராமல் இருக்க விநாயகர் துணை வேண்டும் என்ற எண்ணத்தில் தாமுநகர் குடியிருப்பு வாசிகளால் உருவாக்கப்பட்டது.

மாவட்டம் :

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில், தாமுநகர், புலியகுளம், கோயம்புத்தூர்.

எப்படி செல்வது?

காந்திபுரத்திலிருந்து சிறிது தூரத்தில் புலியகுளம் உள்ளது. காந்திபுரம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களிலிருந்து திருச்சி ரோடு-ராமநாதபுரம் வழியாக புலியகுளம் செல்லும் அனைத்து பேருந்துகள் செல்லும்.

கோயில் சிறப்புகள் :

இக்கோயிலில் கிழக்கு திசை நோக்கி மூலவர் சன்னதி உள்ளது. கோவில் தல வாசல் தெற்கு பக்கம் நோக்கி உள்ளது. 

இத்திருக்கோவில் அபிராமி அம்மை உடனமர், ஸ்ரீ அமிர்தகடேச பெருமான் வீற்றிருப்பதால் இங்கு உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற விஷேச ஹோமங்கள் நடைபெறும்.

இங்கு லட்சுமி நாராயணர், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகிரகங்கள், ஆஞ்சநேயர், காலபைரவர் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளன.

திருவிழா:

புரட்டாசி சனிக்கிழமைகள், அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், ஸ்ரீ மகா காலபைரவாஷ்டமி லட்சார்ச்சனை, கார்த்திகை ஜோதி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ஆருத்ரா தரிசனம், அனுமன் ஜெயந்தி, தைப்பூசம், சூரசம்ஹாரம் ஷண்முகார்ச்சனை, மகா சிவராத்திரி, வைகாசி விசாகம், ஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பிரார்த்தனை : 

காரிய தடைகள் நீங்க, திருமண தடை நீங்க, வழக்குகள், பூமி சம்பந்தமான பிரச்சனைகள் தீர, பித்ருதோஷம் நீங்க, புத்திர பாக்கியம், ஆயுஷ்ய ஹோமம், அஷ்டமி தினத்தில் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, சாந்தி ஹோமம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் ஆகியவை செய்யப்படுகின்றன.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக