Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்கள்: பரிசு அறிவித்த சீன நிறுவனம்- அனைவருக்கும் ஸ்மார்ட்போன்!

எம்ஐ 11 அல்ட்ரா யூனிட் பரிசு

டோக்கியோ ஒலிம்பிக் 2020 சமீபத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் ஸ்மார்ட்போன் எம்ஐ 11 அல்ட்ரா வழங்கப்படும் என சியோமி அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல தேவையான முயற்சியையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுவதாக சியோமி இந்தியாவின் மனுகுமார் ஜெய்ன் டுவிட் செய்திருந்தார். மேலும் இந்திய ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வழங்கியதற்காக சியோமிக்கு நன்றி தெரிவித்தார். சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் போன் என குறிப்பிட்டிருந்தார்.

எம்ஐ 11 அல்ட்ரா யூனிட் பரிசு

இந்தியா சார்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா, லவ்லினா போர்கோஹெய்ன், பிவி சிந்து மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றனர். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எம்ஐ 11 அல்ட்ரா யூனிட்டை சியோமி வழங்க இருக்கிறது. அதேபோல் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என மனு குமார் ஜெயின் உறுதிப்படுத்தினார். 1980-க்கு பிறகு இந்திய ஹாக்கி அணி முதல் முறையாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பரிசு ஒருபுறம் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக்கின் வீரர்களுக்கு இந்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பரிசுகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்

எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் 6.81-இன்ச் WQHD+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது1,440x3,200 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. மி 11 அல்ட்ரா சாதனத்தின் பின்புறம் 1.1-இன்ச் டிஸ்பிளே மற்றும் 126x294 பிக்சல் தீர்மானம் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு ஆப் வசதிகளை வேகமாக இயக்க முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த புதிய சாதனம். சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு அருமையான சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,999 ஆக இருக்கிறது. 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், நாவிக் ஆதரவு, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக