
வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து பளுதூக்கும் போட்டிகள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று நிறைவடைந்தன. இந்தியா 1 தங்கம் (Gold Medal), 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.
ஒலிம்பிக்கில் (Olympics) முக்கிய போட்டிகளாக கருதப்படும் குத்துச்சண்டை, பளுதூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் பலர் ஊக்க மருந்து எடுத்துக்கொள்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சில விளையாட்டு வீரர்கள் சோதனையின் போது பிடிபடுகின்றனர். இதனால் வீரர்களின் எதிர்காலமும் போட்டியின் மீதுள்ள நம்பகத்தன்மையும் பாழாகும் சூழல் ஏற்படுகிறது.
ஆகையால், குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய இரு போட்டிகளும் பாரீஸில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து நீக்கப்படும் என கூறப்படுகின்றது. இந்த அறிவிப்பிற்கு பெரும்பாலானோர் ஒப்புதல் அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த போட்டிகளை நிரந்தரமாக ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விளையாட்டுகள் நீக்கப்படுவதற்கு, வீரர்கள் ஊக்க மருந்துகளை எடுத்துக்கொள்வது, நிர்வாக பிரச்சனை, இவற்றில் நடக்கும் பண மோசடி போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றது. இந்த முடிவுக்கு ஐஓசி குழு உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததும், ஐஓசி நிர்வாக கமிட்டி இறுதி முடிவினை எடுக்கும் என கூறப்படுகிறது.
பளு தூக்குதல் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளை ஒலிம்பிக் போட்டிகளில் (Olympic Games)
இருந்து நீக்குவது குறித்து ஒலிம்பிக் தலைமை மற்றும் சர்வதேச ஒலிம்பிக்
கமிட்டிக்கு (IOC) இடையில் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து
வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை IOC இப்படிப்பட்ட விளையாட்டுகளை
நீக்குவதற்கான அதிகாரத்தை எடுத்துக்கொண்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக