
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் எச்எம்டி குளோபல் இணைந்து நான்கு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. இன்றைய மெய்நிகர் விளக்கத்தில், நோக்கியா சி 01 பிளஸ், நோக்கியா சி 30, நோக்கியா ஜி 10 மற்றும் நோக்கியா சி 20 பிளஸ் உள்ளிட்ட நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை எச்எம்டி அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதன் முதல் 5G சேவை நோக்கியா XR20 மூலம் வெளிவரும் என்று நிறுவனம் உறுதி செய்தது.
எச்எம்டி குளோபல் நோக்கியா
ஜியோ மற்றும் எச்எம்டி குளோபல் இடையேயான கூட்டு பயனர்களுக்கு ஒரு டன் நன்மைகளை அளிக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நோக்கியா சி 20 பிளஸ் விவரக்குறிப்புகள் மற்றும் விலை விபரம் பற்றி முதலில் பார்க்கலாம். நோக்கியா சி 20 பிளஸ் ஸ்மார்ட்போன் சாதனமானது 6.50 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனில் இயங்கும். இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் பெயரிடப்படாத ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.
நோக்கியா சி 20 பிளஸ்
இந்த சாதனம் பின்புறத்தில் 8 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. சாதனம் 3 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களைப் பெறும், மேலும் 1 ஆண்டு மாற்றுக் கொள்கையுடன் வரும். இது கூடுதல் பாதுகாப்பிற்காக ஃபேஸ் அன்லாக் ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது. நோக்கியா சி 20 பிளஸ் இந்தியாவில் இரண்டு வகைகளில் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
விலை இவ்வளவு குறைவா? அடேங்கப்பா.!
முதல் வேரியண்ட் மாடல் 2 ஜிபி மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் ரூ .8,999 என்ற விலை புள்ளியில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல், இதன் இரண்டாவது மாடல் 3 ஜிபி மற்றும் 32 ஜிபி வேரியண்ட் ரூ. 9,999 என்ற விலை புலியின் கீழ் வெளியாகும். ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, எம்ஆர்பியில் 10% தள்ளுபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2 ஜிபி+32 ஜிபி வேரியன்ட் ரூ .8,099 விலையிலும், 3 ஜிபி+32 ஜிபி வேரியண்ட் ரூ. 8,999 விலையிலும் கிடைக்கும்.
ஜியோ பயனர்களுக்கு மட்டும் ரூ .4,000 மதிப்புள்ள கூடுதல் நன்மை
இதனுடன், ரூ .4,000 மதிப்புள்ள கூடுதல் நன்மைகளும் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. நோக்கியா சி 01 பிளஸ், நோக்கியா சி 30 சிறப்பம்ச விபரங்கள், நோக்கியா சி 01 பிளஸ் ஸ்மார்ட்போன் சாதனமானது 5.45 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனில் இயங்கும். இந்த சாதனம் 2 வருட மதிப்புள்ள பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.
2 வருட மதிப்புள்ள பாதுகாப்பு
மேலும், நோக்கியா சி 30 ஸ்மார்ட்போன் சாதனமானது 6.82 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6,000 எம்ஏஎச் பெரிய பேட்டரியுடன் வருகிறது. பின்புறத்தில் 13 எம்பி முதன்மை சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது மற்றும் சாதனம் ஆண்ட்ராய்டு 11 இல் பெட்டிக்கு வெளியே இயங்கும். சாதனம் 2 வருட மதிப்புள்ள பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். அதேபோல், நோக்கியா சி 01 பிளஸ் மற்றும் நோக்கியா சி 30 இன் பிற விவரக்குறிப்புகள் மற்றும் விலைகள் நிறுவனத்தால் பகிரப்படவில்லை என்பதனால், நாம் சற்று பொறுமையாக காத்திருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக