
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்காக நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது அசத்தலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்
அதாவது வோடபோன் ஐடியாவின் பிரபலமான ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் டபுள் டேட்டா நன்மை மற்றும் ZEE5 சந்தா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் முன்பு 2ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது,தற்போது வழங்கப்பட்டுள்ள டபுள் டேட்டா நன்மை மூலம் தினசரி 4ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். எனவே இந்த திட்டத்தின் மூலம் இதன் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 224ஜிபி டேட்டாவை பெறமுடியும்.
வோடபோன் ஐடியாவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் பெறமுடியும்.
இதுதவிர ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகை, Binge ஆல்-நைட் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறமுடியும். குறிப்பாக நாம் கொடுக்கும் பணத்திற்கு தகுந்தபடி இந்த திட்டத்தில் அனைத்து நன்மைகள் கிடைக்கிறது என்றே கூறலாம். மேலும் இப்போது இந்த திட்டத்தில் ZEE5 பிரீமியம் சந்தாவும் கிடைப்பதால் அதிக மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் இந்நிறுவனம் ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் 25ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Vi Movies இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் ஐடியாவின் ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சலுகைகள் அறிவித்து வந்தாலும் கடந்த மே மாதம் அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளன என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஜியோ நிறுவனம் மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. வெளிவந்த தகவலின் அடிப்படையில், கடந்த மே வரையிலான காலகட்டத்தில் வயர்லெஸ் சந்தாதாரர் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு 36.15 சதவீதமாக இருக்கிறது. பின்பு ஜியோவின் மொத்த பயனர்களின் எண்ணிக்கை தற்போது 43.12 கோடியாக இருக்கிறது.
அதேசமயம்
ஏர்டெல் நிறுவனம் சுமார் 46 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பின்பு
வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 42 லட்சம், பிஎஸ்என்எல் நிறுவனம் 8.8 லட்சம்
வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. குறிப்பாக இந்த விவரங்கள் அனைத்தும் டிராய்
வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக