Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

சிறந்த டிரைவருக்கான பரிசு... அடுத்தக்கட்ட நடவடிக்கை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------
செம காமெடி....!!
---------------------------------------

பெரிய நகரம் ஒன்றில், ஒருவர் காரில் தன் மனைவி, அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அவரை ஒரு போலீஸ் ஜீப் தொடர்ந்து கொண்டிருந்தது. அவரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலீஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று, அவர் கார் முன் நின்றது. 

இறங்கி வந்த போலீஸ், அவரிடம் குட் ஈவ்னிங் சார்.. அவர் குட் ஈவ்னிங், ஏதாவது பிரச்சனையா?.

போலீஸ், நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். 

ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், 

ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல்,

சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.

அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, 

உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள். 

அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும் என்று சொன்னார். 

போலீஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார் என்றார். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலீஸில் மாட்டிகிட்டோம்..
---------------------------------------
இதயம்..!
---------------------------------------
💗 இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

💗 இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

💗 இதயத்தின் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள்.

💗 இதயத்தின் கீழ் அறையின் பெயர் வெண்ட்ரிக்கிள்.

💗 இதயத்தின் வலது அறைகளில் அசுத்தமான ரத்தம் உள்ளது.

💗 இதயத்தின் இடது அறைகளில் சுத்தமான ரத்தம் உள்ளது.

💗 இதயத்துடிப்பை அறிய உதவுவது ஸ்டெதஸ்கோப்.

💗 இதய அறைகளுக்கு இடையே வால்வுகள் உள்ளன.

💗 இதயம் நுரையீரல்களுக்கு பின்புறமாக அமைந்துள்ளது.

💗 இதயமே நமது உடலின் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

💗 நுரையீரல் பகுதியில் ஆக்சிஜன் ஏற்றப்படும் ரத்தம், இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

💗 உங்கள் கையை பொத்திக் கொண்டால் என்ன அளவு இருக்குமோ, இதயம் அந்த அளவுடையதாக இருக்கும்.

💗 இதயம் சுமார் அரை கிலோ எடை கொண்டிருக்கும்.

💗 இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்பை உருவாக்குகிறது.

💗 இதயத்துடிப்பு உருவாகும் இடம் பேஸ்மேக்கர் எனப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக