
அமைவிடம் :
அருள்மிகு நாகராஜர் பாம்புக்கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா நகரிலுள்ள பாம்புமேக்காடு மனையில் அமைந்துள்ள கோயிலாகும். கேரளாவிலுள்ள பாம்புக்கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் இக்கோவில் ஆகும். இது கோயில் அல்ல, வீடு தான். தனியாருக்கு உட்பட்டது. சுமார் 500 வருடங்களுக்கு பழமையான கோவிலாகும்.
மாவட்டம் :
அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை, திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம்.
எப்படி செல்வது?
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து ரயில் மற்றும் பேருந்து வசதிகள் திருச்சூருக்கு உள்ளன.
கோயில் சிறப்பு :
சுற்றிலும் புல், பூண்டு, மரம், மட்டைகளுமாய் காட்சி தர ஒரு பெரிய வீட்டுக்குள் நாகராஜா, நாகயக்ஷி ஆகியோர் சிலை வடிவத்தில் உள்ளனர்.
இத்தலத்தில் அணையா விளக்கு எப்போதும் எரிகிறது. மேலும் நாகம் தவிர, பகவதி பத்ரகாளி வழிபாடும் நடக்கிறது.
தமிழகத்திலுள்ள நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இவ்வீட்டார் நிர்ணயித்த தாந்த்ரீக முறைப்படியே பூஜை நடக்கிறது.
சர்ப்பதோஷம் நீங்க இங்கு பூஜை நடத்திக் கொள்ளலாம். பத்து ரூபாயிலிருந்து 6 ஆயிரம் வரை செலவாகும் பூஜைகள் நடக்கின்றன.
நாகதோஷம் சம்பந்தமான வழிபாடுகளை நம்பூதிரியின் வம்சத்தினர் இன்று வரை செய்து வருகின்றனர்.
கோயில் திருவிழா :
கார்த்திகை முதல் தேதியிலிருந்து 41 நாட்கள் தொடர்ச்சியாகவும், ஆவணியில் முதல் ஏழுநாட்களும் அனைவரும் கோயில் அருகில் சில நிபந்தனைகளின் பேரில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற நாட்களில் கண்டிப்பாக முன் அனுமதி பெற்றால் மட்டுமே அனுமதி உண்டு. ஜாதவேத நம்பூதிரி என்பவர் பூஜைகளைக் கவனிக்கிறார். காலையில் மட்டுமே பூஜை உண்டு.
வேண்டுதல் :
சர்ப்பதோஷம் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் நாகருக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
கோயில் பிரசாதம் :
இத்தலத்தில் பூஜை செய்த பிறகு முடிவில் எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக