--------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
--------------------------------------------------
மாலதி : லட்டு மாதிரி இருக்கிற உன்னை அந்த மாப்பிள்ளை ஏன் வேணாம்னு சொல்லிவிட்டார்?
கோமதி : அவருக்கு சுகர் இருக்காம்!
மாலதி : 😂😂
--------------------------------------------------
வெப்பத்தை தணிக்க...!
--------------------------------------------------
🍹 தண்ணீருக்குப் பதிலாக தாதுக்கள் சேர்க்கப்பட்ட, உப்பு சேர்க்கப்பட்ட தண்ணீரை குடிக்கலாம்.
🍹 அசதியாக இருப்பவர்கள் குளுக்கோஸ் கலந்த நீர் பருகலாம்.
🍹 எலுமிச்சை, கிர்ணி, தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களின் பானங்களை பருகலாம்.
🍹 இளநீர் பருகலாம். வெள்ளரிக்காய், நுங்கு சாப்பிடலாம்.
🍹 காலையும், மாலையும் தலைக்கு குளியல் போடலாம்.
🍹 வாரத்தில் ஒரு முறையாவது மூலிகை எண்ணெய் தேய்த்து குளித்து உடல் சூட்டை தணிக்கலாம்.
🍹 உடலில் சந்தனம் மற்றும் மஞ்சள் பூசிக் கொள்ளலாம்.
🍹 பழங்களை அதிகமாக சாப்பிடலாம்.
🍹 தண்ணீருடன் சேர்ந்த பழஞ்சோறு நல்லது. கூழ் - களி வகைகளை சாப்பிடலாம்.
🍹 வெயிலில் செல்ல நேர்ந்தால் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.
--------------------------------------------------
உலகின் மிகப்பெரிய மலர்...!
--------------------------------------------------
🌺 இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மழைக்காடுகளில் ரபிளீசியா ஆர்னொல்டா சுயககடநளயை என்ற விசித்திரத் தாவரம் உள்ளது. இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. ஆனால், ஒரே ஒரு மலர் மட்டும் உண்டு. அதுதான் உலகின் மிகப்பெரிய மலர் ஆகும்.
🌺 இம்மலரின் குறுக்களவு 3 அடியையும் தாண்டும். முழு வளர்ச்சியடைந்த இம்மலரின் எடை 7 கிலோ வரை இருக்கும். 5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக்கொள்ள முடியும். பூவின் நடுவே உள்ள கிண்ணம் போன்ற குழியில் 10 லீட்டர் நீரை ஊற்றி வைத்திருக்க முடியும். இம்மலருக்கு இன்னொரு விசித்திரமும் உண்டு. இதன் விதைகள் யானைகள் மூலமே பரப்பப்படுகின்றன. மற்ற செடிகளைப் பற்றியோ, மண்ணுக்கு வெளியேவோ இதன் வேர்கள் நிலை கொள்கின்றன.
🌺 மற்ற தாவரங்களின் நீரையும், ஊட்டச்சத்தையும் உறிஞ்சுகின்றன. இத்தாவரம் இறந்த பிறகு, ஒட்டும் தன்மை கொண்ட விதைகளை அளிக்கும். யானையோ, காண்டாமிருகமோ இதை மிதிக்கும்போது, காலில் ஒட்டிக்கொள்ளும் விதைகள் இடம்பெயர்கின்றன.
🌺 ஒட்டியுள்ள வேண்டாத பொருளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் வேறொரு தாவரத்துக்கு அருகில் முளைவிடத் தொடங்குகின்றன. அங்கு இன்னொரு பிரம்மாண்ட மலர் மலருகின்றன.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக