Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

வைத்தீஸ்வரர் கோவில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.

அமைவிடம் :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது வைத்தீஸ்வரர் கோவில். வைத்தீஸ்வரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.

மாவட்டம் :

வைத்தீஸ்வரர் கோவில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.

எப்படி செல்வது?

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து சிறிது தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. சீர்காழி ரெயில் நிலையத்தில் இறங்கிய பின் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம்.

கோயில் சிறப்பு :

இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.

இத்தலத்தில் உள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன.

பொதுவாக நவகிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவகிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது சிறப்பான ஒன்றாகும். 

அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். செவ்வாய் தோஷத்தை நீக்கும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. மேலும் இந்த கோயிலின் தோற்றம் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாக திகழ்கிறது.

கோயில் திருவிழா :

மாதக்கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரை மாதப் பிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

வேண்டுதல் :

செவ்வாய் தோஷம் நீங்கவும், கட்டியோ, தேமலோ அல்லது தோல் நோய் ஏதாவது தோன்றினால் அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

வெல்லக் கட்டிகளை கொண்டுவந்து தீர்த்த குளத்தில் கரைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணி தீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.

கோயில் பிரசாதம் :

கடவுளுக்கு படைத்த பொருட்காளான திருநீறும், சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) ஆகியவை நோய்களை தீர்க்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

மேலும் இன்னொரு வகை நோய்களை தீர்க்கும் மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்தும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக