Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

கழுகை போல திடமாக... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க....!!
-------------------------------------
தொண்டர் 1 : தலைவர் எதுக்கு அவர் மனைவி பண்ண பொங்கலை கட்சி ஆபீஸ்க்கு எடுத்துக்கிட்டு போறாரு..? 
தொண்டர் 2 : போஸ்டர் ஒட்டறதுக்காம்..!
தொண்டர் 1 : 😀😀
-------------------------------------
கிணற்று நீர்..!
-------------------------------------
பொதுவாக கிணறுகளில் உள்ள நீர் கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். இதற்கு காரணம் தரைமட்டத்திற்கு கீழே சுமார் 50 முதல் 60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில் வெப்பத்தை கடத்தும் என்பதால் கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர் ஏறக்குறைய 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம்.

கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர்காலத்தில் சில பகுதிகளின் சுற்றுச்சூழல் 5 சென்டிகிரேடு வெப்பநிலைக்கும் செல்வதுண்டு. எனவே குளிர்காலத்தில் கிணற்று நீர் 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருப்பதால் அது வெதுவெதுப்பான நீராக உணரப்படுகிறது. இதற்கு நேர்மாறான நிலை கோடைகாலத்தில் உண்டாகிறது. கோடைகாலத்தில் சில பகுதிகளின் வெப்பநிலை 45 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களில் கிணற்று நீர் 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருப்பதால் சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில் கிணற்று நீர் குளிர்ந்த நீராக உணரப்படுகிறது.
-------------------------------------
கழுகை போல இருங்கள்..!
-------------------------------------
பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம். 70 ஆண்டுக் காலம் வாழ வேண்டுமென்றால், அது 40 வயதில் தன்னையே உருமாற்றம் செய்ய வேண்டும்.

கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும்.

இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது. இவை தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.

கழுகு என்ன செய்யும் தெரியுமா? இந்தக் காலத்தில், உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும்.

புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.

இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.

வாழ்க்கையில் இதுதான் கடைசி என்று நினைப்போம். ஆனால், அந்த வாழ்க்கையைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைக்காமல் போகாது. ஆனால், அந்த வாய்ப்பு வலியோடு வரலாம். அதைத் தாங்குவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அதைத் தாண்டி வந்தால் நமக்கும் மறுபிறவி கிடைக்கலாம். அதற்குப் பின் வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக மாறிவிடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக