ஒப்போ நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்மார்ட்போன் சாதனம் அன்டர் ஸ்கிரீன் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்பதை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் புகைப்படங்களின் தரம் குறையாமல் அழகான செல்பிக்களை எடுக்க வழி செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட அன்டர் ஸ்கிரீன் கேமரா அம்சம் பயனர்கள் பதிவு செய்யும் படங்களில் உள்ள பிக்சல்களை குறைத்தது என்று கூறப்படுகிறது.
அன்டர் ஸ்கிரீன் கேமரா அம்சத்தை முழுத்திரை அனுபவத்தைக் காண்பிப்பதற்காக நிறுவனம் அதன் டிஸ்பிளேவில் முழுமையாக பிரதிபலிக்கும் ஒரு இ-ரீடர் செயலியை இயக்கும் முன்மாதிரியை டிஸ்பிளேவில் காட்டியுள்ளது. ஒப்போ நிறுவனம் டிஸ்பிளேவின் கேமரா பகுதியில் அதே 400 PPI அடர்த்தியையும், ஆக்சன் 20 ஐ விட சிறந்த கேமரா தரத்தையும் வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
நினைவுகூர, OPPO சில காலமாக காட்சிக்கு கீழ் உள்ள கேமரா தொழில்நுட்பத்தில் வேலை செய்து வருகிறது, மேலும் இது 2019 இல் MWC ஷாங்காயில் முதல் டெமோவைக் காட்டியது. இருப்பினும், நிறுவனம் இன்னும் ஒரு உண்மையான வர்த்தக சாதனத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை, ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் மாதங்களில் நாம் ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த அன்டர் டிஸ்பிளே கேமரா அம்சத்தைப் பயனர்களால் வெறும் கண்களால் பார்க்க முடியாது. டிஸ்பிளே ஸ்கிரீனின் கீழ் உள்ள கேமரா பகுதியை நிறுவனம் மறைத்து வைத்துள்ளது. இது ஒரு பிரத்தியேகமான தொழில்நுட்பத்தின் காரணத்தினால் செயல்படுகிறது. முன்பு வந்த அன்டர் டிஸ்பிளே தலைசிறந்த அனுபவம் கிடைக்கும். டிஸ்ப்ளே பயன்பாட்டின் போதும், இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் நீண்ட நாட்களாக இந்த தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை ஒப்போ ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சம் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், இப்போது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதன் அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் எந்த ஸ்மார்ட்போன் மாடல் சாதனத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் சரியாக தெரியாமல் இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக