செம காமெடி....!!
------------------------------------
பாபு : நிறைய ஓட்டை இருக்குன்னு என் கதையை திருப்பி அனுப்பிட்டாங்க...
கோபு : அப்படியா? உன் கதை பேர் என்ன..?
பாபு : சல்லடை..!
கோபு : 😅😅
------------------------------------
மனைவி : பக்கத்து வீட்டிலே டி.வி. ரிப்பேராம்... உடனே ஒரு மெக்கானிக்கை அழைச்சுட்டு வாங்க...
கணவன் : அவங்க மேலே உனக்கு என்னடி இவ்வளவு அக்கறை?
மனைவி : நான் இங்கே மெகா சீரியல் பார்த்து அழுதுக்கிட்டு இருக்கேன். அங்கே அவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்களே...!
கணவன் : 😛😛
------------------------------------
வெற்றி - தோல்வி...!!
------------------------------------
வெற்றி - உனக்கு கொண்டாட மகிழ்ச்சியை தரும்.
தோல்வி - போராட உனக்கு போதுமான வெறியை தரும்.
வெற்றி - உன்னை யாரென்று இந்த உலகத்திற்கு காட்டும்.
தோல்வி - நீ யாரென்று உனக்கே காட்டும்...
------------------------------------
விடுகதைகள்...!!
------------------------------------
1. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும். அவன் யார்?
2. வாலால் நீர் குடிக்கும், வாயால் பூச்சொரியும். அது என்ன?
3. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?
4. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான். அது என்ன?
5. பேசுவான் நடக்கமாட்டான், பாடுவான் ஆடமாட்டான். அவன் யார்?
விடை :
1. கத்தரிக்காய்
2. விளக்கு
3. உளுந்து
4. தீக்குச்சி
5. வானொலிப் பெட்டி
------------------------------------
குறளும்... பொருளும்...!!
------------------------------------
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
பொருள் :
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக