
ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த ஆண்டு நான்காவது முறையாக தனது புதிய ஷெப்பர்ட் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. கடந்த முறை ப்ளூ ஆரிஜின் நிறுவனரும் கோடீஸ்வரருமான ஜெஃப் பெசோஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டு திரும்பினார். இருப்பினும் தற்போதைய கேப்ஸ்யூல்கள் மனிதர்களை கொண்டு செல்லவில்லை.
என்எஸ்-17 என்று அழைக்கப்படும் ராக்கெட்
என்எஸ்-17 என அழைக்கப்படும் இந்த புதிய ஷெப்பர்ட் பணி சரக்குகளை எடுத்துச் செல்ல அர்பணிக்கப்பட்டுள்ளது. மேற்கு டெக்சாஸில் உள்ள ப்ளூ ஆரிஜினின் தனியார் தளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதற்கு முன்பாக இது அதிகபட்சமாக 347430 அடி (105.6 கிலோ மீட்டர்) உயரத்தை அடைந்தது. என்எஸ்-17 ஏவுதளில் இருந்து கேப்ஸ்யூல்கள் தரையிறக்கம் வரை 10 நிமிடங்கள் 38 வினாடிகள் நீடித்தது.
புதிய ஷெப்பர்ட் ராக்கெட் பூஸ்டர்
மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த புதிய ஷெப்பர்ட் ராக்கெட் பூஸ்டர் எட்டாவது முறையாக ஏவப்பட்டு தரையிறக்கப்பட்டது. என்எஸ்-17 க்கான பூஸ்டர் மற்றும் கேப்ஸ்யூல்கள் பறக்கும் சரக்கு பயனங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நிறுவனம் தனது இரண்டாவது குழு விமானத்தை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி சுற்றுலா
நிறுவன் இதன் விலையை வெளியிடவில்லை என்றாலும் நியூ ஷெப்பர்ட் சர்பார்பிட்டல் விண்வெளி சுற்றுலாவில் விர்ஜின் கேலக்டிக் உடன் போட்டியிடுகிறது. தற்போது ஏவப்பட்ட ராக்கெட் முற்றிலும் மறுசுழற்சி முறையில் தயாரான ராக்கெட்டில் ஒன்றாகும். இந்த ராக்கெட் புவிவட்டப் பாதையில் சுமார் 11 நிமிடங்கள் நிலை நிறுத்தப்பட்டு இரண்டு பிரிவுகளாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சற்று தாமதம்
இந்த ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் செலுத்தப்படவில்லை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சற்று தாமதமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் இருந்து பூஸ்டர் மற்றும் கேப்ஸ்யூல் தனித்தனியாக பிரித்து தரையிறக்கப்பட்டது. ப்ளூ ஆர்ஜின் மற்றும் விர்ஜின் கேலக்டிக் இடையே விண்வெளி பயணத்துக்கான போட்டி நிலவுவதாகவே கருதப்படுகிறது.
விண்ணுக்கு சென்ற பெசோஸ்
அமேசான்.காம் இன்க் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் மூன்று பேரை ஏற்றிக் கொண்டு ப்ளூ ஆர்ஜினின் முதல் விமானம் விண்ணுக்கு பறந்தது. ப்ளூ ஆர்ஜினின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு தரையிறங்கியது. விண்கலன் பூமியில் இருந்து சுமார் 62 மைல் (100 கிலோமீட்டர்) உயரத்தில் கர்மன் கோட்டை கடந்து சென்றது. இதனால் குழுவினர் எடை குறையும் உணர்வை அனுபவித்தனர்.
கர்மன் கோட்டைத் தாண்டி பயணம்
பெரிய ஜன்னல்கள் மற்றும் சாய்ந்த இருக்கைகளுடன் கூடிய 10 அடி உயர கேப்ஸ்யூல் பூஸ்டரில் இருந்து பிரிக்கப்பட்டு பூமிக்கு மேலே 62 மைல் அதாவது 100 கிலோமீட்டர் கர்மன் கோட்டைத் தாண்டி மேலே பயணித்தது. அங்கு பயணிகள் மறக்கமுடியாத புதுவித அனுபவங்களை அனுபவித்தனர். பின்னர் மீண்டும் ஆறு பாராசூட்களுடன் கேப்ஸ்யூல்கள் பாலைவன மைதானத்தை நோக்கி வந்தது.
விர்ஜின் கேலடிக் ஹோல்டிங்ஸ்
விர்ஜின் கேலடிக் ஹோல்டிங்ஸ் இன்க் விண்வெளி பயணம் வெற்றிகரமாக மேற்கொண்ட சில நாட்களில் ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது விரைவில் விண்வெறி சுற்றுலா மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை குறிக்கும் விதமாக இருக்கிறது. மேலும் அடுத்தடுத்த பயணங்களை மேற்கொள்வதற்கு பல செல்வந்தர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக