Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

அங்க தான் நீங்க, இங்க நாங்க தான்: அதிகரிக்கும் செகண்ட் ஹேண்ட் மொபைல் விற்பனை- ஓஎல்எக்ஸ் அறிக்கை!

செகண்ட் ஹேண்ட் மொபைல்

ஓஎல்எக்ஸ் 2021 மொபைல் போன்களுக்கான தேவை 100% ஆக இருந்த நிலையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிகபட்சமாக 115 சதவிகிதத்தை உயர்ந்தது என தகவல்கள் தெரிவிக்கிறது. செகண்ட் ஹேண்ட் சாதனமாக ஆப்பிள், சியோமி மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து பிரபல பிராண்டுகளாக இருந்தது. இதில் உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் மற்றும் ஆந்திரா ஆகியவை அதிக கோரிக்கைகளை பெற்றுள்ளன. ஆப்பிள் ஐபோன் மாடல்கள் ஆனது சாதனம் வாங்குபவர்களிடையே இந்தியாவின் செகண்ட் ஹேண்ட் தேர்வாளர்களிடையே மிகவும் பிரபலமான சாதனங்களாக உள்ளது.

செகண்ட் ஹேண்ட் மொபைல்

செகண்ட் ஹேண்ட் மொபைல் என்று குறிப்பிடுவது முதலாவது ஒருவருக்கு சொந்தமாகி அடுத்த விற்பனை என்பதை குறிக்கப்படுகிறது. இதில் மூன்றாம், நான்காம் நிலை விற்பனை சாதனமாக இருக்கும். செகண்ட் ஹேண்ட் மொபைல் குறித்து ஓஎல்எக்ஸ் இந்தியாவின் சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்துகிறது. அதில் ஆப்பிள் அதிகப்படியாகவும் அடுத்த இடத்தில் சியோமி மற்றும் சாம்சங் போன்கள் சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. தொற்றுப் பரவல் இரண்டாம் அலைக்கு பிறகு மொபைல் போன்களுக்கான தேவை அதிகரித்தது என்றே கூறலாம்.

ஓஎல்எக்ஸ் ஆய்வு

ஓஎல்எக்ஸ் ஆய்வில் அடுக்கு 3 நகரங்களில் ஸ்மார்ட்போன்கள் தேவை 43 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 1 நகரங்களில் செகண்ட் ஸ்மார்ட்போன்கள் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் மொபைல் போன்கள் தேவை அதிகமாக இருந்து முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரிக்கும் மொபைல் போன்கள் தேவை

ஓஎல்எக்ஸ் 2021 மொபைல் போன்களுக்கு தேவை 100 சதவீதத்தில் தொடங்கி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிகபட்சமாக 115 சதவீதத்தை அனுபவித்தது. பூட்டுதல் காலத்தில் ஸ்மார்ட்போன்கள் தேவை அதிகளவில் இருந்ததாகவே கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு விருப்பமும் முன்னுரிமையும் இருப்பதாக ஓஎல்எக்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஆப்பிள், சியோமி மற்றும் சாம்சங் போன்களை தவிர விவோ, ஒப்போ, ரியல்மி மற்றும் ஒன்பிளஸ் போன்ற பிராண்டுகளும் முன்னணியில் இருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் விற்பனை

ஆப்பிள் ஐபோன் விற்பனை கடந்த சில வருடங்களா உயர்ந்து வருகிறது என்றாலும் சியோமி, சாம்சங், விவோ, ஒப்போ மற்றும் ரியல்மியை விட ஆப்பிள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் பின்தங்கி இருந்தாலும், ஓஎல்எக்ஸ் புதிய அறிக்கைப்படி ஆப்பிள் செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன் விற்பனையில் 34% பங்குடன் முதலிடத்தில் இருக்கிறது. கோவிட் -19 இன் இரண்டாவது அலைக்குப் பிறகு செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

பல தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்

கொரோனா பரவுவதால் நாட்டில் பூட்டுதல் அறிவிக்கப்பட்டதில் இருந்து வேலை, கல்வி மற்றும் ஓய்வு என பல தேவைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் என்பது பிரதானமாக இருக்கிறது. இரண்டாம் நிலை ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்து வரும் நேரத்தில் ஆப்பிள் ஐபோன்கள் அதிக அளவு இருந்துள்ளது. அடுத்ததாக சியோமி, சாம்சங், விவோ, ஒப்போ, ரியல்மி மற்றும் ஒன்பிளஸ் போன்ற சாதனங்கள் சந்தை பங்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

செகண்ட் ஹேண்ட் போன்

செகண்ட் ஹேண்ட் போன் எனப்படும் போது அதில் மக்கள் ஆர்வம் ஐபோன்களையே விரும்புகிறார்கள். காரணம் முதல்நிலை ஆப்பிள் ஐபோன் விலை அதிகமாக இருப்பதே ஆகும், ஆண்ட்ராய்டு போன் குறித்து பார்க்கையில் அதன் விலை பல்வேறு பிரிவில் இருப்பதால் முதல் நிலை ஆண்ட்ராய்டு சாதனங்களையே மக்கள் விரும்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக