
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு ஆன்லைன் பரிவர்த்தனையின் போதும், 16 இலக்க அட்டை எண், சிவிவி எண், எக்ஸ்பெய்ரி தேதி ஆகிய அனைத்தும் கொடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி தொடர்ந்து வாடிக்கையாளார்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்?
மேலும் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட தகவல்களை சேவை நிறுவனங்கள் சேமிக்க கூடாது. இது முன்னதாக ஒரு வாடிக்கையாளர் சிவிவி நம்பரையும், ஓடிபியையும் கொடுத்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இனி முழு கார்டு 16 இலக்க எண் மற்றும் எக்ஸ்பெய்ரி தேதி, சிவிவி நம்பர் உள்ளிட்ட அனைத்தும் கொடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முக்கியம்
ஒரு புறம் இதனால் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது தாமதமாகலாம் என்றாலும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆக ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு அம்சம் பொருந்திய இந்த அறிவிப்பானது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக நடக்கும் மோசடிகளை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது நடைமுறை?
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நடைமுறையானது ஜனவரி 2022 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக அதன் பிறகு நீங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனில் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இந்த விவரங்கள் தேவைப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குற்றங்கள் குறையலாம்
இன்றைய நாளில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் ஆன்லைன் சில்லறை விற்பனை அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனையும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக அதிக பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஆக இதன் மூலம் பல மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஆக ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது மேற்கொண்டு குற்றங்களை குறைக்க வழிவகுக்கலாம்.
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு
ஏனெனில் முன்பை போல ஆன்லைன் நிறுவனங்கள் உங்கள் தகவல்களை சேமிக்க முடியாது என்பதால், தகவல்கள் திருடப்படும் அபாயமும் இல்லை. ஆக இனி வரும் காலங்களில் பாதுகாப்பாக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக அடிக்கடி ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோருக்கு மிக உதவிகரமான தகவலாகவே இருக்கலாம்.
மக்கள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை
வங்கி வாடிக்கையாளார்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி பற்பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. சமீபத்தில் தற்போது அளிக்கப்பட்டு வரும் அனைத்துக் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட்களுக்கும் மேக்னடிக் பட்டையுடன் தான் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் 2024 முதல் இந்த மேக்னடிக் பட்டைக்கு வங்கிகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன் ஆக அளிக்கப்படும். இதே 2029ம் ஆண்டுக்குள் மொத்தமாக மேக்னடிக் பட்டை பயன்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக