
நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்டு நிறுவனம் கிரானா ஸ்டோர்களுக்கு உதவும் வகையில் ஒரு அசத்தலான திட்டத்தினை அறிவித்துள்ளது.
கிரானா ஸ்டோர்கள் இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும் தெருவோர சில்லறை பெட்டிக் கடைகள். இந்த சிறிய கடைகள் பலவிதமான மளிகைப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட பலவற்றையும் கொண்டுள்ள கடைகள்.
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களைப் பெற இந்த கடைகள் மூலம் தங்களின் சேவைகளை இணைந்து பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கி வருகின்றது.
புதிய கடன் திட்டம்
இதற்காக கிரானா கடை உரிமையாளர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து தங்கள் நிறுவனத்துடன் பார்ட்னர்களாக இணைந்துள்ளது ஃபிளிப்கார்ட் நிறுவனம். இந்த நிலையில் தற்போது இந்த கிரானா ஸ்டோர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உதவும் வகையில் கடன் வழங்குவதற்கான புதிய கடன் திட்டத்தினை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
இதற்காக பிளிப்கார்ட் நிறுவனம் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் உடன் இணைந்துள்ளது. பிளிப்கார்டின் இந்த கடன் திட்டத்தின் மூலம் 5,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். அதுவும் 14 நாட்கள் வரை வட்டி இல்லாத காலத்துடன் கடன் வழங்கப்படவுள்ளது.
பிளிப்கார்ட்டின் இந்த திட்டம் தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையின் தலைவருமான ஆதர்ஷ் மேனன், பிளிப்கார்ட் மொத்த விற்பனையில் எங்களது முக்கியக் குறிக்கோள் கிரானா மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வணிகத்தை எளிதாக்குவதும், அவர்களின் வளர்ச்சியினை ஊக்கப்படுத்துவதும் தான்.
மிகப்பெரிய சவால்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிரானாக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நிதி நெருக்கடி தான். ஆக இந்த நெருக்கடியை போக்க, இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறு விற்பனையாளர்களின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். எங்கள் தளத்தில் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தவும் இது உதவும்.
பிளிப்கார்ட் + வால்மார்ட்
அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை நிறுவனமான வால்மார்ட் நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிளிப்கார்டின் பெரும்பான்மையான பங்கினை வாங்கியது. இந்த நிலையில் தற்போது பிளிப்கார்ட் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 350 மில்லியனும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.
லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாளர்கள்
இவர்கள் தவிர சந்தையில் 3 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாளார்கள் பிளிப்கார்டில் இணைந்துள்ளனர். இதில் 60% அதிகமான விற்பனையாளர்கள் அடுக்கு 2 நகரங்களில் இருந்து பதிவு செய்துள்ளதாகவும் பிளிப்கார்டின் தரவுகள் கூறுகின்றன.
நல்ல விஷயம் தான்
பிளிப்கார்டின் இந்த கடன் திட்டமானது, கிரானாக்களை முறையான கடன் பெற மற்றும் வணிகத்தை அதிகரிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. பணப்புழக்கத்தினை அதிகரிக்கும். அதிலும் முதலில் 14 நாட்களுக்கு வட்டியில்லை என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக