Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

TrueCaller-க்கு போட்டியாக வெளியான BharatCaller ஆப்! வெயிட்-ஆ? இல்ல வேஸ்ட்-ஆ!

மேட் இன் இந்தியா காலர் ஐடி ஆப் ஆன பாரத் காலர், ஸ்வீடிஷ் நிறுவனமான ட்ரூ காலர் ஐடி ஆப்பிற்கு சிறந்த மாற்றாக இருக்குமா.. இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது, இது பயன்படுத்த பாதுகாப்பானதா, எளிமையானதா, இதோ விவரங்கள்.

 முன்பின் அறியப்படாத அல்லது தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை கண்டறிய உதவும் ட்ரூகாலர் ஆப்பிற்கு போட்டியாக களமிறங்கி உள்ள செயலி தான் - பாரத் காலர் ஐடி.

ட்ரூகாலர் ஆப்பை போலவே தான் இதுவும் வேலை செய்யும், அதாவது அடையாளம் தெரியாத நம்பர்களின் காலர் ஐடி பெயரை வெளிப்படுத்தும். ஆனால் இதில் உள்ள ஒரு நல்ல விடயம் என்னவென்றால் - இது 100% மேட் இன் இந்தியா காலர் ஐடி ஆப் ஆகும்!

கூகுள் பிளே ஸ்டாரில் உள்ள ஆப் விளக்கவுரையின் படி, "பாரத் காலர் ஐடி ஆப் ஆனது 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர் தரவுத்தளத்தையும், உலக சமூகத்திலிருந்து 1 பில்லியனுக்கும் அதிகமான எண்களின் தரவையும் கொண்டுள்ளது. இது உங்கள் தகவல்தொடர்புகளைப் பாதுகாப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாள உதவும் ஒரு ஆப் ஆகும்."

மேலும் "பாரத் காலர் ஐடி ஆப் ஆனது உங்கள் போன் காண்டாக்ட் புக்கை பதிவேற்றாது. மேலும் உங்கள் இருப்பிடத்தையும் (லோக்கேஷன்) கண்காணிக்காது. ஆண்ட்ராய்டு 6.0 வெர்ஷன் மற்றும் அதற்கு மேலான ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த ஆப் அணுக கிடைக்கும்." என்றும்கூகுள் பிளே ஸ்டாரில் உள்ள ஆப் விளக்கவுரை விவரிக்கிறது.

பார்த் காலர் ஐடி ஆப்பில் உள்ள முக்கிய அம்சங்கள்:

காலர் ஐடி (Caller ID)

மிகவும் மேம்பட்ட பாரத்காலர் ஐடி ஆப்பைப் பயன்படுத்தி, அழைப்பாளர் பெயருடன் அறியப்படாத உள்வரும் அழைப்புகளை அடையாளம் காண முடியும். இந்த ஆப் வழியாக உண்மையான அழைப்பாளர் விவரங்களை நீங்கள் உடனடியாகப் பெறலாம், அத்துடன் அழைப்புக்கு பதிலளிக்கலாமா வேண்டாமா என்கிற முடிவையும் விரைவாக எடுக்கலாம்.

ஸ்மார்ட் கால் லாக் (Smart Call Log)

மிஸ்டு கால், உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் உட்பட இது உண்மையான அழைப்பாளர் பெயருடன் சமீபத்திய கால் ஹிஸ்டரியையும் விரிவாகக் காட்டும். இத ஆப்பில் தெரியாத தொலைபேசி எண்கள் என்று ஒன்று இருக்கவே இருக்காது.

போன் நம்பர் சேர்ச் (Phone Number Search)

இந்த ஆப்பில் உள்ள ஸ்மார்ட் சேர்ச் அமைப்பின் மூலம் எந்த தொலைபேசி எண்ணையும் நீங்கள் தேடலாம். அதாவது உங்களை யார் அழைத்தார்கள் என்பதைப் பார்க்க நீங்கள் இந்த போன் நம்பர் சேர்ச் அம்சத்தை பயன்படுத்தலாம்.

ஆஃப்லைன் தரவுத்தளம் (Offline database)

இணைய அணுகல் இல்லாமலேயே அறியப்படாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அடையாளம் காணவும் இந்த ஆப் உதவும். இந்தியா, எகிப்து, பிரேசில், அமெரிக்கா & சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இந்த ஆப்பிற்கான ஆஃப்லைன் தரவுத்தளம் அணுக கிடைக்கிறது.

பாரத் காலர் ஐடி ஆப்பை ஏன் தேர்வு செய்யலாம் என்பதற்கான சில காரணங்கள்:

- இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதால், மற்ற நாடுகளின் ஆப்களை விட சற்றே பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்தவும் எளிதானது.

- சிங்கிள் மற்றும் டூயல் சிம் போன்களை ஆதரிக்கிறது.

- அறியப்படாத தொலைபேசி எண்ணின் அழைப்பு விவரங்களைக் கண்டறிய சக்திவாய்ந்த எண்கள் தரவுத்தளத்தை கொண்டுள்ளது

- ஸ்மார்ட் போன் நம்பர் சேர்ச் ஆனது யார் உங்களை அழைத்தார்கள் என்பதை அறிய உதவுகிறது

- இணையம் இல்லாமல் பெயர் மற்றும் புகைப்படத்துடன் உண்மையான காலர் ஐடி பெயரை கண்டுபிடிக்கலாம்.

பாரத் காலர் ஐடி ஆப் பல மொழிக்களுக்கான ஆதரவுடன் வருகிறது மற்றும் உலகின் மிகப்பெரிய தொலைபேசி எண் தரவுத்தளத்தையும் கொண்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் விளக்கவுரையின் படி, பாரத் காலர் ஐடி 2021 தற்போது இலவசமாக கிடைக்கிறது. ஆக இது பெயிட் ஆப் ஆக, அதாவது பணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய வெர்ஷனிலும் அணுக கிடைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக