வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பாக்கம் பாளையம் பகுதியில் நிரந்தர வைப்பு கணக்கை சேமிப்பு கணக்காக மாற்றி கிளை அஞ்சல் அலுவலர் பணம் கையாடல் செய்துள்ள விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
வேலூர்
மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பாக்கம் பாளையம் பகுதியில் உள்ள கிளை
அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக பணியாற்றி வருபவர் புண்ணியகோட்டி.
இவர் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி
வரை இடைப்பட்ட காலங்களில் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டும் நிரந்தர வைப்பு கணக்கை
தொடங்கி உள்ளனர். அந்தக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு லட்சத்து 23
ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளனர்.
இதை அஞ்சல் அலுவலர் புண்ணியகோட்டி நிரந்தர வைப்பு கணக்குக்கு பதிலாக சேமிப்பு
கணக்காக மாற்றி பதிவு செய்து பணத்தை கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து ஆகஸ்ட் 3
ஆம் தேதி வேலூர் உட்கோட்ட அஞ்சல் அலுவலக ஆய்வாளர் திருஞானசம்பந்தம் வேப்பங்குப்பம்
காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் கிளை அஞ்சல் அலுவலர் புண்ணியகோட்டி மீது ஐபிசி பிரிவு 420
இன் கீழ் வழக்கு பதிந்த வேப்பங்குப்பம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பத்மநாதன்
விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பான விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு
அஞ்சல் அலுவலர் புண்ணியகோட்டி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அஞ்சல்
அலுவலக ஆய்வாளர் தலைமை அதிகாரிக்கு பரிந்துரை செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி
உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக