கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-----------------------------------------------------------
அமலா : பஸ்ஸில் போகும்போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.
விமலா : அப்புறம் என்னாச்சி?
அமலா : பிளேடை தூக்கி வெளியில் போட்டுட்டேன்.
விமலா : 😉😉
-----------------------------------------------------------
ஆசிரியர் : ட்ரெயின கண்டுபிடிக்கலன்ன என்ன ஆகி இருக்கும்?
மாணவன் : தண்டவாளம் வேஸ்ட் ஆகி இருக்கும் சார்...
ஆசிரியர் : 😩😩
-----------------------------------------------------------
சிலந்தி வலையா? மதில் சுவரா?
-----------------------------------------------------------
ஒரு வீரன் கடவுளின் பேரில் அதிக நம்பிக்கையும், அன்பும் வைத்து இருந்தான். ஒருநாள் போரின்போது அவனைக் கொல்ல நினைத்து சில பேர் துரத்தினர். அவன் அவர்களிடம் இருந்து தப்பி ஒரு காட்டில் உள்ள குகையில் மறைந்துக்கொண்டான்.
அப்பொழுது அவன் கடவுளிடம் 'ஆ கடவுளே" நீர் எவ்வளவு மகிமை நிறைந்தவர் என்று நான் நம்புகிறேன். உமது ஒரே வார்த்தையால் என்னைச் சுற்றி ஒரு மதில் சுவரை உருவாக்கி என் விரோதியிடம் இருந்து என்னைக் காப்பாற்றும் என்று வேண்டிக்கொண்டு கண்களை இறுக மூடி படுத்துக்கொண்டான்.
சிறிது நேரத்தில் ஒரு சிலந்தி பூச்சி அந்த குகை வாயில் முழுதும் மூடும்படி தனது வலையை பின்னியது. அந்த வீரன் மெல்ல கண் திறந்து கடவுள் தனக்காக மதில் சுவரை உருவாக்கியிருப்பார் என நினைத்தான். ஆனால், சிலந்தி வலையைப் பார்த்து பயந்து 'ஐயோ" இன்று நான் சாவது உறுதி என நினைத்தான்.
அவன் நினைத்த மாதிரியே எதிரிகள் அவனை தேடி வந்தனர். அப்பொழுது ஒருவன் இந்த குகையில் ஒளிந்திருப்பானோ என்றான். இன்னொருவன் சிலந்தி வலையைக் கண்டு அது எப்படி முடியும்? அவன் உள்ளே நுழைந்து இருந்தால் இப்போ இந்த சிலந்தி வலை இருக்காதே என்று சொல்லி அவ்விடத்தை விட்டு கடந்து சென்றனர்.
அந்த வீரன் அப்போ தனது தவறை உணர்ந்தான். நான் மதில் சுவரால் தான் கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என நினைத்தேன். ஆனால், 'கடவுள்" ஒரு சாதாரண சிலந்தி வலையின் மூலமாக என்னைக் காப்பாற்றி விட்டாரே என நினைத்து கடவுளுக்கு நன்றி சொன்னான்.
ஆம்... பிரியமானவர்களே!! நாமும் அநேக நேரங்களில் இப்படித்தான் நினைத்து சோர்ந்து போகிறோம். ஆனால், நம்மை உருவாக்கி நம்மை உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிற கடவுளுக்கு நம்மை எப்படி தப்புவிக்க வேண்டும் என நன்றாகவே தெரியும். அதனால் எது நடந்தாலும் பொறுமையோடு உற்று நோக்கினால் அது நன்மையாகவே முடியும்.
எந்த சூழ்நிலையிலும் மனம் சோர்ந்து போகாமல் இருந்தால் நிச்சயம் ஆண்டவர் நம்மை எல்லாத் தீமைகளிலிருந்தும் விலக்கி காப்பார். மதில் சுவர் தேவையில்லை. சாதாரண சிலந்தி வலையே போதுமானது. நிச்சயமாகவே முடிவு உண்டு. உங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக