
சியோமி சமீபத்தில் தனது மிக்ஸ் போனை எம்ஐ மிக்ஸ் 4 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த சாதனத்தில் மிகவும் பேசப்பட்ட அம்சம் ஆண்டி-தெஃப்ட் அம்சமாகும். சிம் கார்ட் நீக்கப்பட்டாலும் இந்த அம்சம் சாதனம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க அனுமதிக்கிறது. South China Morning Post தகவலின்படி சீன அரசாங்கம் இந்த அம்சத்தை நீக்க சியோமிக்கு உத்தரவிட்டுள்ளது.
முறையான ஒப்புதல் பெறவில்லை
வெளியான அறிக்கையின்படி, இந்த அம்சம் தொடர்புடைய விதிகளுக்கு இணங்கவில்லை மற்றும் சீன கட்டுப்பாட்டாளர்களிடம் இருந்து முறையான ஒப்புதல் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா இ-சிம் மற்றும் மெய்நிகர் சிம் தொழில்நுட்பத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டிருக்கிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் சியோமி பகிரவில்லை.
ஆண்டி-தெஃப்ட் பாதுகாப்பு அம்சம்
சியோமியின் ஆண்டி-தெஃப்ட் பாதுகாப்பு அம்சம் குறித்து பார்க்கையில், இது பொதுவாக திருட்டு எதிர்ப்பு செயல்பாடு உடன் வருகிறது. ஸ்மார்ட்போனை அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்கிறது. ஸ்மார்ட்போன் திருடப்பட்டால் அதன் இருப்பிடத்தை காண்பிக்க உதவுகிறது. சியோமியின் எம்ஐ மிக்ஸ் 4., சாதனத்தில் இருக்கும் திருட்டு எதிர்ப்பு அம்சமானது, ஸ்மார்ட்போனில் இருந்து சிம் கார்ட் நீக்கப்பட்டாலும். இழந்த சாதனத்தை கண்டுபிடிக்க உரிமையாளரை அணுக உதவுகிறது. இ-சிம் சாதனம் இணையத்துடன் இணைந்து சாதனம் இருப்பிடத்தை கண்டறிய உதவுகிறது.
தனியுரிமை பாதுகாப்பில் சிறப்பு கவனம்
இந்த வார தொடக்கத்தில் எம்ஐ மிக்ஸ் 4 வெளியீட்டில், சியோமியின் நிறுவனர் லீ ஜுன் தற்போதைய தகவல் குறித்து பேசினார். அதில் சியோமி ஒரு நிறுவனமான எப்போதும் பயனர்களுக்கான தனியுரிமை பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறது என குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக