
வாட்ஸ்அப் பயனர்களுக்கு நிச்சயமாக பிரைவசி தொடர்பான தேவைகள் அதிகமாகவுள்ளது. அதிலும் நெருங்கியவர்களுடன் சாட் செய்யும் போது, மற்றவர்களிடமிருந்து சில முக்கிய சாட்களை பாதுகாப்பாக மறைத்து வைத்துக்கொள்ள உங்களில் சிலர் மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை பயன்படுத்துவீர்கள். அது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்பதனால், வாட்ஸ்அப் மூலமே உங்கள் சாட்டைகளை ஹைடு செய்யும் வழியைத் தான் இந்த பதிவின் மூலம் நாங்கள் கற்றுத்தரப்போகிறோம்.
உங்கள் வாட்ஸ்அப் சாட்களை யாருக்கும் தெரியாமல் ஹைடு செய்ய வேண்டுமா?
சில நேரங்களில் உங்கள் வாட்ஸ்அப் சாட்களில் சிலவற்றை நீங்கள் மறைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்கிறீர்கள், ஏனெனில் அவை உங்கள் சாட் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதை நீங்கள் விரும்புவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் சாட்களை ஹைடு செய்ய அல்லது மறைத்து வைக்க நீங்கள் வாட்ஸ்அப் மெசேஜிங் தளத்தில் இருக்கும் 'Archived' அம்சத்தின் மூலம் சாட்டைகளை மறைக்கலாம். இத்துடன் உங்களுக்கு இப்போது 'பெர்மனென்ட் ஹைடு' விருப்பமும் கிடைக்கிறது.
உண்மையில் ஹைடு செய்வது என்றால் என்ன? வாட்ஸ்அப் இந்த முறையில் எப்படி செயல்படுகிறது?
வாட்ஸ்அப் வழங்கும் இந்த இரண்டு அம்சங்களைக் கொண்டு, நீங்கள் எளிதாக உங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் சாட்டைகளை சாட் பாக்சில் இருந்து மறைக்க முடியும். அடிப்படையில், ஒரு சாட்டை மறைப்பது என்பது அந்த சாட் பாக்சின் உள் இருக்கும் அனைத்து மெசேஜ்களையும் நீக்குவது என்பது பொருள் அல்ல, அல்லது உங்கள் SD கார்டில் இவற்றை பேக்அப் செய்து வைப்பது என்றும் பொருள் அல்ல. இது உங்கள் போனில் இருக்கும் வாட்ஸ்அப் தளத்திற்குள் மறைத்து வைக்கப்படும் ஒரு அம்சமாகும். உங்கள் தேவைக்கேற்ப இதை நீங்கள் மீண்டும் மீட்டெடுத்துக்கொள்ள முடியும்.
Archived அம்சத்தை பயன்படுத்தினால் என்ன நடக்கும்? நோட்டிபிகேஷன் வருமா அல்லது வராதா?
வாட்ஸ்அப் வழங்கும் Archived அம்சத்தை நீங்கள் ஒரு தனிப்பட்ட சாட்டிலோ அல்லது குழு அரட்டையிலோ பயன்படுத்தும் போது, அது புதிய மெசேஜ்களை பெறும்போது காப்பகப்படுத்தப்பட்ட தனிநபர் அல்லது குழு அரட்டைகள் காப்பகத்தில் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் அந்த மெசேஜ்ஜில் குறிப்பிடப்படாவிட்டால் அந்த காப்பகப்படுத்தப்பட்ட சாட்களுக்கான நோட்டிபிகேஷன் அறிவிப்புகளை நீங்கள் பெறமாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்க. சரி, இப்போது எப்படி வாட்ஸ்அப் சாட்களை ஹைடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஐபோனில் வாட்ஸ்அப் சாட்களை மறைப்பது எப்படி?
- உங்களிடம் ஐபோன் இருந்தால், உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் ஓபன் செய்துகொள்ளுங்கள்.
- நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் ஹைடு செய்ய விரும்பும் சாட்டில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து அதன் கூடுதல் விருப்பங்களுக்குச் செல்லவும்.
- இங்கிருந்து, வாட்ஸ்அப் காப்பகங்களுக்கு நகர்த்த "Archive" விருப்பத்தைத் தட்டவும்.
- இதேபோல் நீங்கள் பல சாட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரே நேரத்தில் ஆர்ச்சிவ் ஃபோல்டருக்கு நகர்த்தலாம்.
- உங்கள் வாட்ஸ்அப் சாட்டை மீண்டும் ஓபன் செய்யுங்கள்.
- இப்பொழுது, மேலே சர்ச் பாக்ஸ் அருகில் உள்ள காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகள் விருப்பத்தை நீங்கள் காணலாம்.
- மறைக்கப்பட்ட உரையாடல்களைக் காண Archive சாட்ஸ் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது சாட்டை லெப்ட் ஸ்வைப் செய்து, உங்கள் வாட்ஸ்அப் சாட் பாக்சில் தெரியும் வகையில் "Unarchive" கிளிக் செய்யவும்.
- இதன் மூலம் மறைக்கப்பட்ட சாட் மீண்டும் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக