
கொரோனா காலக்கட்டம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜூம் செயலி மற்றும் கூகுள் மீட் பெரிதளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஜூம் செயலியில் தற்போது புது அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கான முக்கியத்துவம்
ஆன்லைன் வகுப்புகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பள்ளியில் மாணவர்கள் பயிலும் போது அனைவரின் கவனமும் ஆசரியர்களை நோக்கியே இருக்கும். ஆனால் ஆன்லைன் வகுப்பின் போது டிஸ்ப்ளேவில் அனைத்து மாணவர்களும் நேரில் சந்தித்துக் கொள்கின்றனர். இதனால் கவனச் சிதைவு ஏற்படுவதோடு ஆசிரியர்களுக்கு பாடம் எடுப்பதும் சிரமமாக இருக்கிறது.
Focus Mode என்ற புதிய அம்சம்
இதையடுத்து மாணவர்கள் ஆசிரியர்களை மட்டுமே எதிர்கொள்ளும் வகையில் புதிய அம்சத்தை ஜூம் செயலி கொண்டு வந்துள்ளது. இந்த புதிய அம்சமானது Focus Mode ஆகும். இதன் மூலம் அனைத்து மாணவர்களையும் ஆசரியர்கள் பார்க்கலாம், அனைத்து மாணவர்களும் ஆசரியர்களை மட்டுமே பார்க்க முடியும். இந்த அம்சத்தை அப்டேட் செய்வதன் மூலம் ஆசிரியர்கள், ஹோஸ்ட் மற்றும் கோ ஹோஸ்ட் ஆகியோர் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்
இந்த அம்சத்தை பயன்படுத்தும் வழிமுறை குறித்து பார்க்கையில், ஜூம் செயலிக்குள் சென்று அட்மின் போர்டலில் உள்நுழைய வேண்டும். பின் அக்கவுண்ட் மேனேஜ்மென்ட் ஆப்சனை தேர்வு செய்து நேவிகேஷன் பேனலில் காணப்படும் அக்கவுண்ட் செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்ய வேண்டும். பின் மீட்டிங் டேப் என்ற தேர்வை கிளிக் செய்து அதில் காட்டப்படும் ஃபோகஸ் மோட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் enable மற்றும் Disable என்ற விருப்பம் காட்டப்படும். அதன்பின் வெரிபிகேஷன் முறைக்கு ஒருமுறை மீண்டும் கேட்கப்படும் அதை கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். இந்த அம்சம் ஆசிரியர்கள் மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஏணைய மாணவர்களுக்கு அதிருப்தியை கொடுக்கும் என்றே தெரிவிக்கப்படுகிறது.
ஜூம் வீடியோ கால் ரெகார்டிங் அம்சம்
ஜூம் பயன்பாட்டில் நிறுவனம் சமீபத்தில் வீடியோ கால் ரெகார்டிங் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த ஜூம் ரெகார்ட் மீட்டிங் அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் நேரடியாக ஜூம் கிளவுட் அல்லது உள்ளது டெஸ்க்டாப்பில் ஜூம் மீட்டிங்கை சேமித்துக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக