
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரெட்மி நோட் 10 தொடரில் தொடர்ச்சியாக பல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதைய தகவல் ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் குறித்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களாக சந்தையில் அமோக வரவேற்பு பெற்றாலும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் தற்போது நாட்டில் நிறுத்தப்படுவது போன்று தெரிகிறது.
ரெட்மி நோட் 10 மாடல்கள்
இந்தியாவில் நிறுத்தப்பட்ட ரெட்மி நோட் 10 மாடல்கள் குறித்து பார்க்கலாம். ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் இரண்டும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இருக்கிறது. இந்த வேரியண்டின் ரெட்மி நோட் ப்ரோ விலை ரூ.15,999 எனவும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.18,999 எனவும் இருக்கிறது.
6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
தற்போடு டுவிட்டர் அடிப்படையிலான டிப்ஸ்டர் தகவல்படி இந்திய சந்தையில் ரெட்மி குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு கொண்ட சாதனத்தின் அடிப்படை மாறுபாடாகும். இந்த வேரியண்ட் இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இரண்டு வகைகளில் மூன்று வண்ண விருப்பங்கள்
ரெட்மி நோட் 10 ப்ரோ சாதனமானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என இரண்டு வகைகளில் வருகிறது. இந்த இரண்டு வகைகளும் மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. அது விண்டேஜ் ப்ரான்ஜ், க்ளேசியல் ப்ளூ மற்றும் டார்க் நைட் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நிறுவத்தப்படுவது என்பது ப்ரோ வேரியண்டின் தொடர்ச்சியான விலை உயர்வுக்கு அடுத்த நடவடிக்கையாகும்.
120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே
ரெட்மி நோட் 10 தொடர் ஸ்மார்ட்போனானது மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனாகும். ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 8ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.
நான்கு பின்புற கேமரா
இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவை கொண்டிருக்கிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது.
16 எம்பி செல்பி கேமரா
அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக