
சந்தேகமே இல்லாமல், புதிய டெக்னோ பாண்டம் எக்ஸ் (Tecno Phantom X) ஸ்மார்ட்போன் சாதனம் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு புதிய ஸ்மார்ட்போனாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வளர்ந்து வரும் சந்தைகளின் ஆர்டர்களின் அதிகரிப்பு, பாண்டம் எக்ஸின் அசாதாரண அம்சங்கள் மற்றும் செயல்திறன் நுகர்வோரின் முக்கிய பேச்சாக இருந்தது என்பதை சமீபத்திய செய்திகள் நிரூபித்துள்ளது.
உலகளாவிய தொழில்நுட்ப ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் Phantom X
அதே நேரத்தில், டெக்னோவின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் உலகளாவிய தொழில்நுட்ப ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இப்படி உலகத்தின் தொழில்நுட்ப ஊடகங்கள் முதல் உலக ஸ்மார்ட்போன் சந்தை வரை அனைவரும் பிரமித்துப் புகழும் இந்த புதிய டெக்னோ பாண்டம் எக்ஸ் ஸ்மார்ட்போனில் அப்படி என்னதான் இருக்கிறது? என்று அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இத்தனை பாராட்டுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் தகுதியானது தானா?
ஏராளமான செய்தி அறிக்கைகளில் பெரும் விமர்சனங்களையும் உயர் மதிப்பீடுகளையும் இந்த ஸ்மார்ட்போன் பெற உண்மையான காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலையும், டெக் உலகமே புகழும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். எல்லோரும் பாராட்டும் இந்த புதிய ஸ்மார்ட்போன் உண்மையிலேயே இத்தனை பாராட்டுகளுக்கு தகுதியானது தானா?
டெக்னோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படவிருக்கும் இந்த புதிய பாண்டம் எக்ஸ் ஸ்மார்ட்போன் மிரட்டலான வடிவமைப்புடன் வருகிறது. இதன் தோற்றமே முதலில் அனைவரையும் கவர்ந்துவிட்டது. அதிலும், பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் டிசைனில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஏராளமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தோற்றத்திலும் தொழில்நுட்பத்திலும் டெக்னோ இம்முறை பல புதிய நேர்த்தியான முயற்சிகளை வெளிப்படுத்தி வெற்றியடைந்துள்ளது.
புதிய Tecno Phantom X ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்
இந்த புதிய Tecno Phantom X ஸ்மார்ட்போன் சாதனம் 6.7' இன்ச் அளவு கொண்ட 1080 x 2340 பிக்சல் தீர்மானத்துடன் 385 பிக்சல் அடர்த்தி உடன் 3து பார்டார்லெஸ் 70 டிக்ரீ கர்வுடு கிளாஸ் டிஸ்பிளேயுடன் வருகிறது. இதன் தொழில்நுட்ப சிறப்பம்சங்களைப் பார்க்கையில், இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் உடன் வருகிறது. இது 2x2.05 GHz, 6x2.0 GHz சிபியு வேகத்துடன், மாலி G76 MC4 உடன் கூடிய 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது.
Phantom X கேமரா அம்சம்
இந்த புதிய Tecno Phantom X ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதன் கேமரா அம்சமும் அனைவராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 50 மெகா பிக்சல் அல்ட்ரா நைட் மோடு அம்சத்துடன் கூடிய பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்னும் கூடுதலாக 13 மெகா பிக்சல் மற்றும் 8 மெகா பிக்சல் சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 48 மெகா பிக்சல் மற்றும் 8 மெகா பிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
இந்தியாவில் பாண்டம் எக்ஸ் போனின் விலை என்னவாக இருக்கும்
டூயல் சிம் அம்சத்துடன், 3ஜி மற்றும் 4ஜி இணைப்பு உடன் ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி அம்சத்துடன் வருகிறது. இந்த புதிய Tecno Phantom X ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 4700 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. புதிய Tecno Phantom X ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிரட்டலான தோற்றத்துடன் வெளிவரத் தயாராக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 18,999 என்ற பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக