
Redmi 10: ரெட்மி 10 ஸ்மார்ட்போன் NBTC சான்றிதழ் இணையதளத்தில் மாடல் நம்பர் 21061119AG உடன் காணப்பட்டது. இதன் மூலம் பட்ஜெட் விலை சியோமி ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் NBTC சான்றிதழ் இணையதளத்தில் கசிந்த தகவலின் படி இந்த சியோமி ரெட்மி 10 (Redmi 10) ஸ்மார்ட்போன் விரைவில் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தாய்லாந்தில் அறிமுகமானவுடன் விரைவில் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் உடனடி அறிமுகம் ஆகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Redmi 10 ஸ்மார்ட்போன் Redmi Note 10 க்கு கீழ் அமரும் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அம்சங்கள் (கசிந்த தகவலின் படி)
இதில் 162 x 75.3 x 8.95 மிமீ இருக்கும் மற்றும் இது பாலிகார்பனேட் சேஸை
கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அளவிலான FHD+ பஞ்ச்-ஹோல்
டிஸ்ப்ளேவுடன் வரும், இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்குகிறது.
கேமராவை பொறுத்தவரை 8 மெகாபிக்சல் முன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின் பக்க பேனலில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் ஒரு ஜோடி 2 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன.
இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12-ஐ கொண்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில், டூயல் சிம், வைஃபை 802.11ac, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகள் அடங்கும். அது Carbon Grey, Pebble White மற்றும் Sea Blue போன்ற வண்ணங்களில் கிடைக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் விலையை வெளியான பட்டில் குறிப்பிடவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக