
பப்ஜி விளையாட்டில் மிகவும் ஆபாசமாக பேசி அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்து வந்த யூடிபர் மதன் மீது ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைபர் கிரைம் போலீசாரால் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார்.
மேலும் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி பப்ஜி மதன் சைபர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பப்ஜி மதன் உடன் அவரது மனைவி கிருத்திகாவும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் குழைந்தையை காரணம்காட்டிகிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அதன்பின்பு பப்ஜி மதன் தனது மீதான குண்டர் சட்டத்தை நீக்குமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில்
பப்ஜி மதன் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட
குற்றப்பத்திரிக்கை சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார்
தாக்கல் செயதுள்ளனர். மேலும் இந்த குற்றப்பத்திரிக்கையில் முதல்
குற்றவாளியாக மதனும் அடுத்து அவரின்
மனைவி கிருத்திகாவும்
சேர்க்கப்பட்டுஅவர்களுக்கு எதிரான 32 புகார்கள் மற்றும் 32 சாட்சியங்கள்
இடம்பெற்றுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி மதன் மீது 150 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 32 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும்
போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் மதன் ஆபாசமாக யூடியூபில் பேசிய ஆடியோ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் அது முடிந்தபின் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக