
பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் பயனர்களுக்கு ஒரே மாதிரியான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதில் பெருமளவில் அறியப்படுகின்றன. வழக்கமாக, பாரதி ஏர்டெல் தனது குறிப்பிட்ட வகையான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து, பின்னர் வோடபோன் ஐடியா (விஐ) அதன் பட்டியலில் ஏர்டெல்லுக்கு ஒத்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதில் சில திட்டங்கள் பயனரின் பணத்தை விரயம் செய்யாமல் குறைந்த செலவில் போதிய நன்மைகளைவழங்கும் திட்டங்களாகச் செயல்படுகிறது.
300 ரூபாய்க்குக் கீழ் கிடைக்கும் Airtel vs Vi திட்டங்கள்
சமீபத்தில் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் 300 ரூபாய்க்குக் கீழ் கிடைக்கும் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. மேலும், இவை இரண்டும் ஒரே விலையில் ஒரே மாதிரியான நன்மையைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களில் எந்த திட்டம் சிறப்பானது? எந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்குக் கூடுதல் நன்மை கிடைக்கும்? என்பதை நாம் இந்த பதிவின் மூலம் ஆராயப்போகிறோம்.
பாரதி ஏர்டெல் ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டம்
பாரதி ஏர்டெல் தனது ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் தனது பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் ட்ருலி அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குவதோடு, தினமும் 100 SMS நன்மையையும் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடி காலம் வெறும் 28 நாட்கள் ஆகும். இத்துடன், இதில் கூடுதல் நன்மையாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் நன்மைகளும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
பாரதி ஏர்டெல் ரூ. 219 ப்ரீபெய்ட் திட்டம்
பாரதி ஏர்டெல் தனது ரூ. 219 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் தனது பயனர்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் ட்ருலி அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குவதோடு, தினமும் 100 SMS நன்மையையும் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடி காலமும் 28 நாட்களுடன் வருகிறது. இத்துடன், இதில் கூடுதல் நன்மையாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் நன்மையுடன் OTT நன்மைகளும் பயனர்களுக்குக் கிடைக்கிறது.
வெறும் 30 ரூபாய் மட்டுமே வித்தியாசம்
பாரதி ஏர்டெல் வழங்கும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே வெறும் 30 ரூபாய் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இருப்பினும், ரூ. 249 திட்டமானது ரூ. 219 திட்டத்தை விடப் பயனர்களுக்குத் தினமும் 0.5 ஜிபி அதிக தினசரி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஏர்டெல் ரூ. 219 திட்டத்துடன் வழங்கப்படும் ஒட்டுமொத்த டேட்டா நன்மை என்பது 28 ஜிபி ஆகும். அதேபோல், ரூ. 249 திட்டம் பயனர்களுக்கு மொத்தமாக 42 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.
இப்போது வோடபோன் ஐடியா நிறுவனம் அதே விலையில் வழங்கும் இரண்டு திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா தனது ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் தனது பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் ட்ருலி அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குவதோடு, தினமும் 100 SMS நன்மையையும் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடி காலமும் 28 நாட்களுடன் வருகிறது. இத்துடன், இதில் கூடுதல் நன்மையாக 'பிங்கே ஆல் நைட்' சலுகை கிடைக்கிறது. இது 12 AM முதல் 6 AM வரை எந்த தடையும் இல்லாமல் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க அனுமதிக்கிறது. இத்துடன் வி மூவிஸ் & டிவி கிளாசிக் கூடுதல் ஓவர்-தி-டாப் (OTT) நன்மையுடன் வருகின்றது.
வோடபோன் ஐடியா ரூ. 219 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா தனது ரூ. 219 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் தனது பயனர்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் ட்ருலி அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குவதோடு, தினமும் 100 SMS நன்மையையும் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடி காலமும் 28 நாட்களுடன் வருகிறது. இத்துடன், இதில் கூடுதல் நன்மையாக 2 ஜிபி போனஸ் டேட்டாவுடன் ஒரு ஆப்/வெப் பிரத்தியேக சலுகை கிடைக்கிறது. இத்துடன் வி மூவிஸ் & டிவி கிளாசிக் கூடுதல் ஓவர்-தி-டாப் (OTT) நன்மையுடன் வருகின்றது.
வோடாபோன் ஐடியா சிறந்ததா அல்லது ஏர்டெல் சிறந்ததா?
எந்த நிறுவனத்தின் திட்டம் அதிக நன்மைகளைத் தருகிறது என்று நீங்கள் யோசித்தால், அது வோடாபோன் ஐடியாவின் திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒரு திட்டத்தை வாங்குவதற்கு முன் நீங்கள் உறுதி செய்ய வேண்டிய ஒரு விஷயம், சிறப்பான நெட்வொர்க் சேவையாகும். பாரதி ஏர்டெல்லின் நெட்வொர்க் வோடபோன் ஐடியாவின் நெட்வொர்க்குடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக வரம்பையும் கவரேஜையும் கொண்டுள்ளது. எனவே ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் கருத்தில் கொள்வதற்கு முன் கவனமாகத் தேர்வு செய்வது நன்று.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக