
போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள. இந்நிலையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எஃப்3 ஜிடி சாதனத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாக பயனர்கள் புகாரளித்துள்ளனர்.
அதாவது கேம் விளையாடும் போது இந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் அதிகமாக சூடாவதாக பயனர்கள் புகாரளித்துள்ளனர். மேலும் போக்கோ நிறுவனம் இந்த சிக்கலை ஒப்புக் கொண்டுள்ளது மற்றும் விரைவில் இந்த பிரச்சனை சரிசெய்யப்படும என்று உறுதியளித்துள்ளது.
குறிப்பாக வரவிருக்கும் MIUI அப்டேட் உடன் இந்த புதிய சிக்கல் சரி செய்யப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுளளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக