
எஸ்பிஐ ஆன்லைன் நெட் பேங்கிங் பயனர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை SBI வங்கி தற்பொழுது வெளியிட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்கள் அனைவரும் கீழே குறிப்பிட்டுள்ள முக்கிய பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்கும் படி SBI எச்சரித்துள்ளது. எஸ்பிஐ ஆன்லைன் நெட் பேங்கிங் பாதுகாப்பைப் பலப்படுத்த இந்த அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம் வாங்க.
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட புதிய எச்சரிக்கை அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி (SBI), சைபர் குற்றத்திலிருந்து தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழிமுறைகளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சேவையை வழங்கிவரும் SBI, தனது வாடிக்கையாளர்கள் வலுவான பாஸ்வோர்டுகளை பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கி, அதன் அவசியம் என்ன என்பதையும் பற்றி விளக்கம் அளித்துள்ளது.
வலுவான மற்றும் பாதுகாப்பான நெட் பேங்கிங் பாஸ்வோர்டை உருவாக்க அறிவுரை
பாதுகாப்பான மற்றும் வலுவான பாஸ்வோர்டு பயனர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் என்பதனால், வலுவான பாஸ்வோர்டை உருவாக்க எட்டு எளிய வழிகளை SBI தற்போது வெளிப்படுத்தியுள்ளது. வலுவான பாஸ்வோர்டு தான் நெட் பேங்கிங் பயனர்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்துகிறது என்று SBI உறுதி செய்துள்ளது. உங்கள் பாஸ்வோர்டை தனித்துவமாகவும் வலுவானதுமாக மாற்ற எஸ்பிஐ கூறும் இந்த 8 செயல்முறையைப் பின்பற்றுங்கள்.
சைபர் கிரைம் குற்றத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள இதை கட்டாயமா?
உங்கள் பாஸ்வோர்டை யாராலும் உடைக்க முடியாத பலமான பாஸ்வொர்டாக மாற்றம் செய்ய சில முக்கிய விஷயங்களை நீங்கள் உங்கள் பாஸ்வோர்டில் பின்பற்றியிருக்க வேண்டும். இதை நீங்கள் சரியாகச் செய்திருந்தால் சைபர் கிரைம் குற்றத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று SBI கூறியுள்ளது. பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருங்கள் என்று SBI வங்கி தனது டிவிட்டர் வழியாக #SafeWithSBI! என்று இந்த தகவலை ட்வீட் செய்துள்ளது.
உங்கள் பாஸ்வோர்டை பலமானதாக மாற்ற இதைச் செய்யுங்கள்
எஸ்பிஐ ஆன்லைன் நெட் பேங்கிங் வாடிக்கையாளர்கள் பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்து ஆகிய இரண்டின் கலவையைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு aBjsE7uG என்று கேப்ஸ் மற்றும் ஸ்மால் ஆங்கில எழுத்துக்களைச் சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.இந்த 8 முக்கிய வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி உங்களின் நெட் பேங்கிங் பாஸ்வோர்டு தரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வோர்டை இந்த அறிவுரைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் பாஸ்வோர்ட் எவ்வளவு பலமானதாக உள்ளது என்பதைச் சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
SBI வெளியிட்டுள்ள இந்த பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பைத் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் விழிப்புடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று SBI தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக