Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 6 செப்டம்பர், 2021

ரூ.1800-க்கு வேப்பங்குச்சியை விற்பனை செய்து வரும் இ-காமர்ஸ் நிறுவனம்.! எங்கு தெரியுமா?

 பொருட்கள் ஆன்லைனில்

ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று தான் கூறவேண்டும். அதாவது கடை கடையாக ஏறி இறங்கி,பிடித்ததை தேடி அலைந்து வாங்கிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறார்கள்.

அதேபோல் குறிப்பிட்ட பொருட்கள் ஆன்லைனில் சலுகை விலையில் கிடைப்பதால் மக்கள் அதிகம் இதை தான் விரும்புகின்றனர். இந்நிலையில் நமது ஊர்களில் இலவசமாக சாலையோர மரங்களில் கிடைக்கும் வேப்பங்குச்சியை அமெரிக்காவில் -காமர்ஸ் நிறுவனம் ஒன்று ரூ.1800-க்கு விற்பனை செய்து வருகிறது.

குறிப்பாக இந்த பேஸ்ட் பிரஷ் வருவதற்கு முன்பு இந்திய மக்கள் பெரும்பாலும் வேப்பங்குச்சி அல்லது ஆலங் குச்சிகளைவைத்தே பற்களை தேய்தனர். குறிப்பாக இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்களை வலிமையாகவும்,
வெண்மையாக வைத்திருந்தது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வேப்பங்குச்சி அல்லது ஆலங் குச்சிகள் சிறந்த ஆரோக்கியத்தை கொடுத்தது.

அதேபோல் பேஸ்ட் பிரஷ் மக்கள் பயன்படுத்த துவங்கியதும்,வேப்பம் குச்சி மற்றும் ஆலங்குச்சியின் பயன்பாடு குறைந்தது. ஆனால் தற்போது மக்கள் கெமிக்கல் இல்லாத பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். அதாவது கெமிக்கல் இல்லாமல் இயற்கையான பொருட்களை விரும்பத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் மக்கள் மத்தியில் வேப்பங்குச்சியின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இதன் அருமை தெரிந்த அமெரிக்காவின் -காமர்ஸ் நிறுவனம் ஒன்று வேப்பங்குச்சியை இந்திய மதிப்பில் சுமார் 1800 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

மேலும் வேப்பங்குச்சியின் மதிப்பை அறிந்து அதை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். கண்டிப்பாக பல்வேறு நாடுகளில் வேப்பங்குச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நியூசிலாந்து வலைத்தளம் ஒன்று vintage Indian daybed எனும் தலைப்பில் கட்டிலை 800 டாலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த கட்டில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பின்பு பழங்கால முறைப்படி இந்த கட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கயிற்று கட்டில் தான் "இந்தியன் வின்டேஜ் பெட்" என்ற பெயரில் நியூசிலாந்து நாட்டில் இருக்கும் ஒரு வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த கயிற்று கட்டில் விலை மிகவும் குறைவு. ஆனால் தற்போது நியூசிலாந்தில் இதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்றுதான் கூறுவேண்டும்.

மேலும் இந்தியாவில் அமேசான்,பிளிப்கார்ட் உள்ளிட்ட பல வலைத்தளங்களை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த தளங்களில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் மொபைல்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பண்டிகை காலங்களில் பட்ஜெட் விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக