Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 6 செப்டம்பர், 2021

ஆரம்பிக்கலாங்களா?- கூகுள் பே தொடங்கிய புதிய அம்சம்: இனி வட்டியோடு பணம் வாங்கலாம்!

கூகுள் பே எஃப்டி

கூகுள் பே தளத்தில் எப்படி எஃப்டி-க்களை மேற்கொள்வது என்பது குறித்து பார்க்கலாம், உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் பே ஆப்பை ஒபன் செய்யவும், பின் வணிகம் மற்றும் பில்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க கீழே செல்லும், இதில் ஈக்விடாஸ் வங்கி ஸ்மாட் விருப்பம் காண்பிக்கப்படும். Illisha Equitas SFB என்ற லோகோவை கிளிக் செய்ய வேண்டும். பின் ஃபிக்சட் டெபாசிட்டில் தங்கள் டெபாசிட் தொகையை தேர்ந்தெடுக்கவும், பின் கேஒய்சி விவரங்கள் ஆதார் எண், பேன் விவரம் உள்ளிட்டவைகளை பதிவிட வேண்டும். அதன்பின் கூகுள் பே யுபிஐ உடன் எஃப்டி அமைப்பு மேற்கொள்ளப்படும்.

கூகுள் பே எஃப்டி

கூகுள் பே எஃப்டி-ல் இருந்து பணம் எடுப்பது எப்படி என ஈக்விடாஸ் ஸ்மார்ட் ஃபைனான்ஸ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதிர்ச்சியடையும் போது எஃப்டியின் முதன்மை தொகையும் வட்டியும் கூகுள் பே பயனாளியின் தற்போதைய வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தியாவின் அனைத்து வங்கியிலும் நேரடியாக வரவு வைக்கப்படும்.

டெபாசிட்களை கண்காணிக்கலாம்

அதேபோல் கூகுள் பே ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை சரிபார்த்து, அதன் டெபாசிட்களை கண்காணிக்கலாம். ஈக்விடாஸ் பேங்க் ஸ்பாட்டை பயன்படுத்தி புதிய ஃபிக்சட் டெபாசிட் தொகையை சேர்க்கலாம். அதேபோல் நேரம் முடிவதற்கு முன்பாக பணம் தேவைப் பட்டால் அதற்கும் வாய்ப்பு உண்டு. அதுவும் கூகுள் பே இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் திரும்பத் தரப்படும்.

ஃபின்டெக் ஸ்டார்ட் அப் சேதுவுடன் கூட்டு

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் சமீபத்தில் ஃபின்டெக் ஸ்டார்ட் அப் சேதுவுடன் கூட்டு சேர்ந்தது. கூகுள் நிறுவனம் தனது கூகுள் பே சேவை மூலமாக இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வைப்பு நிதி பயன்பாட்டை கொண்டுவர இருக்கிறது. கூகுள் பே முதன்முதலாக ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி மூலமாக பிக்சர் டெபாசிட்களை ஒரு வருடம் வழங்கும் என கூறப்படுகிறது.

ஓராண்டு வைப்பு நிதி

தொடர்ச்சியா உஜ்ஜீவன் சிறி நிதி வங்கி மற்றும் ஏயூ சிறிய நிதி வங்கி ஆகியவை விரைவில் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஓராண்டு வைப்பு நிதிக்கு அதிகபட்சமாக 6.35% வட்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஈக்விட்டாஸ் சிறு நிதி வங்கியில் இந்த கணக்கு தொடங்கப்படும், சமயத்தில் வங்கியில் கணக்கு இல்லாத நபர்கள் கூகுள் பே மூலமாக கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

ஆதார் கார்டு மூலம் வழங்கப்படும் ஓடிபி

பயனர்கள் ஆதார் கார்டு மற்றும் அதன்மூலம் வழங்கப்படும் ஒருமுறை கடவுச்சொல் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஃபின்டெக் ஸ்டார்ட்அப் சேது ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் ஸ்டார்ட் அப் ஆகும். நிறுவனம் முன்னதாகவே எஃப்டி-களுக்கு பல்வேறு தளங்களில் சோதனை பதிப்பை உருவாக்கி இருக்கிறது.

6.35 சதவீதம் வரை வட்டி

இதில் 7 - 29 நாட்கள, 30 - 45 நாட்கள், 46 - 90 நாட்கள், 91 - 180 நாட்கள், 181 - 364 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வரையிலான கால இடைவெளிகளில் இந்த திட்டங்கள் அடங்கும். இதன் குறுகிய வட்டி விகிதம் 3.5 சதவீதத்தில் இருந்து 6.35 சதவீதம் வரை இருக்கிறது. கூகுள் இந்தியாவில் இந்த வளர்ச்சியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மற்றும் கூகுள் பே-ல் புதிய அம்சத்திற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியையும் குறிப்பிடவில்லை.

கூகுள் பே மூலம் கணக்கு தொடங்கலாம்

இந்த திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையில் இணையலாம். ஈக்விட்டாஸ் சிறு நிதி வங்கியின் மூலம் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் அதில் கணக்கு இல்லாதவர்கள் கூகுள் பே மூலம் கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டமானது எந்தெந்த முறையில் செயல்படும் எனவும் இது இந்திய பயனர்களிடையே எந்தளவிற்கு வரவேற்பு பெறும் என்பது காலப்போக்கில் அறிந்து கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக