அப்படியா?
------------------------------
'சேமிப்பு"💰 என்பது மூன்று விதமாக இருக்க வேண்டும்!!
சோறு - இன்றைய தேவை.
அரிசி - நாளைய தேவை.
விதை நெல் - எதிர்கால தேவை.
------------------------------
அட சிரிங்க பாஸ்!!
------------------------------
😃டிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும்,
ஒரு வருஷம் வித்தியாசம். இதுதான் உலகம்.!!!
வாழ்க்கைத் தத்துவம்!
------------------------------
😅பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.
😅பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும் ஃப்ரன்ட் வீல முந்த முடியாது இதுதான் உலகம்.
------------------------------
உயிரே, உன் விலை என்ன?
------------------------------
😄கோழிகளின் கழுத்து அறுபடும் போதுகூட ஏற்படாத பரிதாபம்.
கோழிக் கறி கிலோ ரூ.100, உயிருடன் கிலோ ரூ.80 என்பதைப் படிக்கையில் ஏற்படுகிறது!
------------------------------
இருந்தாலும் இவருக்கு இவ்வளவு கரிசனம் கூடாது
------------------------------
😆மேற்கூரையில் திறக்கிற மாதிரி மூடி வச்சிருக்கீங்களே, ஏன்? கூரையை பிச்சுகிட்டு கொடுக்கிற கடவுளுக்கு வீண் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னுதான்..!!
சொல்லிக்க நல்லா இருக்காதே
பத்து வீடு பார்த்ததில் நடுத்தெரு வீடுதான் பிடிச்சிருக்கு, நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க? நடுத்தெருவிலே இருக்கேன்னு சொன்னா சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக