
அமைவிடம் :
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அரசமரத்தின் அடியில் எளிமையாக தோன்றிய இக்கோயில் இன்று கோபுரங்களுடன் உயர்ந்து ஒரு முக்கிய தலமாக இருக்கிறது.
மிகவும் பிரசித்திப்பெற்ற திருவஹீந்திரபுரம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும், செங்கல்பட்டு செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது.
மாவட்டம் :
அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால்பேட்டை - புதுச்சேரி.
எப்படி செல்வது?
லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் சிறப்பு :
இங்கு ஹயக்ரீவர் வலது கண்ணால் பக்தர்களையும், இடது கண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் இருப்பது சிறப்பு.
இத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது.
பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால், இவரை வணங்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை.
இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சம், உலகில் உள்ள பதினொரு நரசிம்ம மூர்த்திகள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் தலம் என்பதுதான். பதினொரு நரசிம்ம மூர்த்திகள் அருள்புரியும் ஓர் அற்புத தலமாக இந்த கோயில் விளங்குகிறது. இங்கு வந்து நரசிம்மர்களை ஒரு சேர தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.
மாணவர்களுக்கு கல்வி வரம் அருளும் ஹயக்ரீவர், உலகின் பல இடங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் அவர் பெரும்பாலும் பெருமாள் கோயில்களில் ஒரு சன்னதி கொண்டுதான் அருள்பாலிப்பார்.
ஆனால் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் மூலவராகவும், உற்சவராகவும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த கோயிலை லட்சுமி ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோயில் என குறிப்பிடுகிறார்கள்.
கோயில் திருவிழா :
ஆவணி திருவோணத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.
வேண்டுதல் :
படிப்பில் மந்தம் உள்ளவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
நேர்த்திக்கடன் :
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக