இந்தியாவில் எல்கட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அனைத்து முன்னணி கார் மற்றும் பைக் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர எலக்ட்ரிக் வாகன விற்பனை நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் வாகனங்கள் நிறுவனத்தின் தலைவர் நவீன் முன்ஜால் முக்கியமான கோரிக்கை அரசுக்கு வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் சுற்றுசூழ்நிலை பாதுக்காக்கவும், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பிரிட்டன், ஜெர்மன், அமெரிக்க உட்பட பல முன்னணி நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
IC இன்ஜின் கார்கள்
இதற்கு ஏற்றார் போல் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் IC இன்ஜின் கொண்ட கார்களின் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது பலரும் விவாதம் செய்யும் முக்கியமான விஷயமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் வாகன 2027ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பெட்ரோல் பயன்படுத்தி இயங்கும் பைக்குகளின் விற்பனையை மொத்தமாக நிறுத்த வேண்டும் தெரிவித்துள்ளது.
ஹீரோ எலக்ட்ரிக் வாகனம் (Hero Electric Vehicles Pvt) நிறுவனத்தின் நிர்வாக தலைவரான நவீன் முன்ஜால் இந்தியா 100 சதவீதம் எலக்ட்ரிக் வாகன பைக்குகளை பயன்படுத்தும் நிறுவனமாக மாற 2027ஆம் ஆண்டு சரியான காலக்கட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சந்தைக்கு சாதகமான காலம் கொடுத்தால் 100 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்கள் என்ற இலக்கை அடைவது மிகவும் தாமதமாகும். ஆனால் 2027 என இலக்கை அரசு நிர்ணயம் செய்தால் இந்த மாற்றம் மிகவும் வேகமாக நடக்கும்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கவும், வர்த்தகப்படுத்தவும், மக்கள் அதை எளிதாக பயன்படுத்தவும் மிகப்பெரிய தடையாக இருப்பது பேட்டரி, ஆட்டோமொபைல் எலக்ட்ரிக் மோட்டார் விலை மற்றும் போதுமான சார்ஜிங் ஸ்டேஷன் இல்லாமல் இருப்பது தான் என நவீன் முன்ஜால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை விடவும் அதிகம் மக்கள் தொகை கொண்ட சீனாவில் விற்பனை செய்யும் மொத்த இரு சக்கர வாகனங்களில் 97 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்கள், இதன் மூலம் உலகின் மிகப்பெரிய எலக்டிரிக் பைக்குகள் பயன்படுத்தும் சீனா உள்ளது. ஆனால் இந்தியாவில் மொத்த இருசக்கர வாகன பிரிவில் 1 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் தான் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கார்களை காட்டிலும் இரு சக்கர வாகனங்கள் அதிகமாக காற்றை மாசுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுப்பாட்டை பெரிய அளவில் தடுக்க முடியும்.
ஹீரோ மோட்டோ கார்ப் லிமிடெட் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மார்ச் 2022ல் அறிமுகம் செய்தது. பஜாஜ் சீட்டாக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த வருடம் 2வது காலாண்டு முதல் விற்பனை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதேபோல் டிவிஎஸ் மோட்டார்ஸ் iQube என்ற ஓரே ஒரு எலக்ட்ரிக் மாடல் ஸ்கூட்டரை டெல்லி மற்றும் பெங்களூரில் விற்பனை செய்து வருகிறது. ஓலா இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக