ஹூண்டாய் இன்று இந்தியாவில் ஸ்மார்ட் எல்இடி டிவியை அறிமுகம் செய்தது. முன்னணி சில்லறை விற்பனை தளங்களில் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் எலெக்ட்ரானிக்ஸ் தனது புதிய 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 3 மாடல்கள் ஸ்மார்ட் டிவியானது ரூ.59,000, 50 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ரூ.79,000 என்ற விலையிலும், அதேபோல் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியானது ரூ.99,000 என்ற விலையிலும் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் முன்னணி கடைகளிலும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிடைக்கின்றன.
ஹூண்டாய் ஸ்மார்ட் எல்இடி டிவி
ஹூண்டாய் ஸ்மார்ட் எல்இடி டிவி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ThinQ AI வாய்ஸ் அங்கீகாரம் மற்றும் மேஜிக் ரிமோட் மூலம் வெப் ஓஎஸ் டிவி மூலம் இயக்கப்படுகின்றன. ஏஆர்எம் CA55 1.1 GHz குவாட் கோர் செயலியின் ஆதரவுடன் இருக்கிறது. இது 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகளை விட நான்கு மடங்கு அதிக வேகமான இயக்கம் கொண்டது.
1.5 ஜிபி ரேம், 8 ஜிபி உள்சேமிப்பு
புதிய வரம்பில் 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி உள்சேமிப்பு, இரட்டை பேண்ட் வைஃபை போன்ற அம்சங்களோடு இது வருகிறது. ஏஎல்எல்எம் (ஆட்டோ லோ லேடென்சி பயன்முறை), எம்இஎம்சி மோஷன் மதிப்பீடு, மிராகேஸ்ட் மற்றும் 2 வே ப்ளூடூத் வசதியோடு இந்த ஸ்மார்ட்டிவி இருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு வேகமான வலை தேடல், துல்லியமான செயல்திறன் உள்ளிட்டவைகளோடு வருகிறது. வெப் ஓஎஸ் டிவி ஸ்மார்ட் இன்டெர்ஃபேஸ் போன்ற பயன்பாடுகள் உடன் பொழுதுபோக்கை உறுதி செய்கிறது. அதேபோல் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5 உள்ளிட்ட பல அணுகல் ஆதரவு இருக்கிறது.
4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி
இதில் கிடைக்கும் பரந்த அளவிலான விளையாட்டுகள் மூலம் விளையாட்டாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை பெற அனுமதிக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகள் 20 வாட்ஸ் சரவுண்ட் சவுண்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ சவுண்ட் தொழில்நுட்ப அனுபவத்துடன் வருகிறது.
வெப் ஓஎஸ் உடன் 4கே அல்ட்ரா எச்டி டிவி
வெப் ஓஎஸ் உடன் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகளை அறிமுகம் செய்த ஹூண்டாஸ் எலெக்ட்ரானிக்ஸ் சிஓஓ அபிஷேக் மல்பனி., இதுகுறித்த பேசினார். வெப் ஓஎஸ் டிவியை மிகவும் மேம்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி இயக்க முறைமையை வழங்குகிறது. ஏஐ தொழில்நுட்பம் மற்றும் எல்ஜி-ல் இருந்து ஒருங்கிணைந்த உள்ளடக்க சேவைகளுடன் கட்டப்பட்ட 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகள் வெப் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகின்றன. இது இந்திய பார்வையாளர்களுக்கு மாற்றுவித அனுபவத்தை கொடுக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக