Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 செப்டம்பர், 2021

செப்டம்பர் 28: இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 28-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி ஒ டிஸ்பிளே வசதி கொண்டு வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆணட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இதன் கேமராக்களை
பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்டஇணைப்பு ஆதரவுகளும் உள்ளது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்போன் வெளிவரும். பின்பு இந்த சாதனத்தின் எடை 175 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!